பொடி சில்லரை தட்டுப்பாடு பஸ் நடத்துனர்கள் தவிப்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
சென்னை : சில்லரை தட்டுப்பாடு அதிகரித்துஉள்ளதால், மாநகர போக்குவரத்து கழக பஸ் நடத்துனர்கள், சில்லரைக்காக, பிச்சைக்காரர்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பணியாற்றும் நடத்துனர்களுக்கு, முதல் பணியேற்கும் காலை மற்றும் மதிய நேரத்தில், 100 ரூபாய்க்கு சில்லரை வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், பணிமனைகளில் உள்ள மேலாளர்கள்,

சென்னை : சில்லரை தட்டுப்பாடு அதிகரித்துஉள்ளதால், மாநகர போக்குவரத்து கழக பஸ் நடத்துனர்கள், சில்லரைக்காக, பிச்சைக்காரர்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பணியாற்றும் நடத்துனர்களுக்கு, முதல் பணியேற்கும் காலை மற்றும் மதிய நேரத்தில், 100 ரூபாய்க்கு சில்லரை வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், பணிமனைகளில் உள்ள மேலாளர்கள், நடத்துனர்களுக்கு ௧௦ ரூபாய் நாணயங்களை சில்லரையாக வழங்குவதால், பொடி சில்லரை வழங்க முடியாமல், நடத்துனர்கள் திண்டாடுகின்றனர்.

இதனால், சென்னை கோயம்பேடு, சென்ட்ரல் உள்ளிட்ட இடங்களில் உள்ள பிச்சைக்காரர்கள், ஊசி, மணி விற்போரிடம் கமிஷன் கொடுத்து, நடத்துனர்கள் சில்லரை பெறுகின்றனர்.இதுகுறித்து, நடத்துனர்கள் கூறுகையில், 'வசூலாகும் சில்லரையை பணிமனையில் செலுத்துகிறோம். ஆனால், அந்த சில்லரையை, ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் கொடுத்துவிட்டு கமிஷன் பெறுகின்றனர். எங்களுக்கு, ௧௦ ரூபாய் நாணயங்களை வழங்குகின்றனர். இதனால், நாங்கள் அல்லாடுகிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X