பொது செய்தி

இந்தியா

இலங்கைக்கான இந்திய துாதருடன்

Added : நவ 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி : இந்தியா - இலங்கை இடையே படகு அவசர ஊர்தி அறிமுகப்படுத்துவது குறித்து, இலங்கைக்கான இந்திய துாதரிடம் கவர்னர் ஆலோசனை நடத்தினார்.அரசு முறைப் பயணமாக புதுச்சேரி வந்துள்ள இலங்கைக்கான இந்திய துாதர் கோபால் பக்லா, நேற்று ராஜ் நிவாசில், கவர்னர் தமிழிசையை சந்தித்து பேசினார்.அப்போது, இந்தியா-இலங்கை இடையிலான நல்லுறவு குறித்து இருவரும் விவாதித்தனர்.மீனவர்கள்

புதுச்சேரி : இந்தியா - இலங்கை இடையே படகு அவசர ஊர்தி அறிமுகப்படுத்துவது குறித்து, இலங்கைக்கான இந்திய துாதரிடம் கவர்னர் ஆலோசனை நடத்தினார்.

அரசு முறைப் பயணமாக புதுச்சேரி வந்துள்ள இலங்கைக்கான இந்திய துாதர் கோபால் பக்லா, நேற்று ராஜ் நிவாசில், கவர்னர் தமிழிசையை சந்தித்து பேசினார்.அப்போது, இந்தியா-இலங்கை இடையிலான நல்லுறவு குறித்து இருவரும் விவாதித்தனர்.மீனவர்கள் பிரச்னையை, அவர்களின் உயிர், உடைமை பாதுகாப்பு, வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மனிதாபிமான முறையில் அணுகுமாறு கவர்னர் வலியுறுத்தினார்.காரைக்கால் - இலங்கை இடையே படகு போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது,

இந்தியா - இலங்கை இடையே படகு அவசர ஊர்தி அறிமுகப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டியது குறித்து ஆலோசனை நடத்தினர்.தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை அரசு விடுதலை செய்வது குறித்து கவர்னர் கேட்டறிந்தார். அதில் இரண்டு மீனவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவதால், அவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்திடுமாறு கேட்டுக் கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X