பொது செய்தி

இந்தியா

சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்க கோரிக்கை

Added : நவ 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி. : நிலுவையில் உள்ள ஐந்துமாத ஊதியத்தை வழங்க வேண்டும் என, புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் விடுத்துள்ள அறிக்கை;கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக, புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்களுக்கு 10 மாத ஊதியம் வழங்கப்படவில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகள்

புதுச்சேரி. : நிலுவையில் உள்ள ஐந்துமாத ஊதியத்தை வழங்க வேண்டும் என, புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் விடுத்துள்ள

அறிக்கை;கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக, புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்களுக்கு 10 மாத ஊதியம் வழங்கப்படவில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பின் மீண்டும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இயங்கிவருகிறது. நிலுவையில் இருந்த 5 மாத ஊதியம் வழங்கப் பட்டுள்ளது. 5 மாதம் ஊதியம் நிலுவையில் உள்ளது.

தற்போது பெய்த மழை, வெள்ளத்தால் சுண்ணாம்பாறு படகு குழாம், பேரடைஸ் பீச் உணவகங்கள் சேதம் அடைந்துள்ளன.சேதத்தை பார்வையிட்டு, பேரிடர் மீட்பு நிதியிலிருந்து மறுசீரமைப்பிற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து, சுற்றுலா வளர்ச்சி கழகம் மீண்டும் புதுப்பொலிவுடன் இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X