பொது செய்தி

தமிழ்நாடு

தழைச்சத்து உரமாகும் வெல்வெட் பீன்ஸ்

Added : நவ 24, 2021
Share
Advertisement
'வெல்வெட் பீன்ஸ்' கொடி உரமாக மாற்றுவது குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் தி.செல்வராஜ் கூறியதாவது: 'மியூக்குனா புருரியன்ஸ்' எனும் வெல்வெட் பீன்ஸ் பயிரானது, அதிக மருத்துவ குணம் உடைய கொடி பயிர். தீவனம் மற்றும் உரப்பயிராகவும் பயன்படுத்தலாம்.ஒரு ஏக்கர் வெல்வெட் பீன்ஸ் சாகுபடி செய்வதற்கு, 20 கிலோ விதை போதுமானது.
 தழைச்சத்து உரமாகும் வெல்வெட் பீன்ஸ்

'வெல்வெட் பீன்ஸ்' கொடி உரமாக மாற்றுவது குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் தி.செல்வராஜ் கூறியதாவது:

'மியூக்குனா புருரியன்ஸ்' எனும் வெல்வெட் பீன்ஸ் பயிரானது, அதிக மருத்துவ குணம் உடைய கொடி பயிர். தீவனம் மற்றும் உரப்பயிராகவும் பயன்படுத்தலாம்.ஒரு ஏக்கர் வெல்வெட் பீன்ஸ் சாகுபடி செய்வதற்கு, 20 கிலோ விதை போதுமானது. காய்கள் மருத்துவ குணம் நிறைந்து இருப்பதால், விதை விற்பனைக்கும், கொடி தழைச்சத்து உரத்திற்கும் பயன்படுத்தலாம்.கொடி பூ எடுக்கும்போது உழவு ஓட்டினால், நிலத்திற்கு தேவையான தழைச்சத்து எளிதாக கிடைக்கும். தேவையில்லாத புற்கள் வளருவதை கட்டுப்படுத்தும் தன்மை உடையது.அதிக மணிச்சத்து கிடைக்க பெற்று, பயிரிடப்படும் பயிரில் கூடுதல் மகசூல் பெற முடியும் என, முனைவர்கள் தாமஸ், பழனியப்பன் ஆகியோரின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.94438 42748

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X