பொது செய்தி

தமிழ்நாடு

கீட்டோன் சொறிவு நோய் தடுக்க கால்நடை துறை அறிவுரை

Added : நவ 24, 2021
Share
Advertisement
மாடுகளை தாக்கும் கீட்டோன் சொறிவு நோயை கட்டுப்படுத்துவது குறித்து, ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய கால்நடை உதவி பேராசிரியர் மற்றும் தலைவர் ரா.கோபி கூறியதாவது:கீட்டோசிஸ் என, அழைக்கப்படும் கீட்டோன் சொறிவு நோய், கன்று போட்ட மாடுகளை தாக்கும். கன்று போட்ட மாடுகளுக்கு, பாலில் சர்க்கரை சத்து உடம்பில் இருந்து அதிகமாக வெளியேறும்போது, இந்நோய் தாக்கம் ஏற்படும்.நாம் கொடுக்கும்

மாடுகளை தாக்கும் கீட்டோன் சொறிவு நோயை கட்டுப்படுத்துவது குறித்து, ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய கால்நடை உதவி பேராசிரியர் மற்றும் தலைவர் ரா.கோபி கூறியதாவது:

கீட்டோசிஸ் என, அழைக்கப்படும் கீட்டோன் சொறிவு நோய், கன்று போட்ட மாடுகளை தாக்கும். கன்று போட்ட மாடுகளுக்கு, பாலில் சர்க்கரை சத்து உடம்பில் இருந்து அதிகமாக வெளியேறும்போது, இந்நோய் தாக்கம் ஏற்படும்.நாம் கொடுக்கும் தீவனத்தில், சரியான அளவு சர்க்கரை சத்து இல்லையெனில்,

இந்நோய் குறைபாடு வரும். பால் உற்பத்தி குறைந்து, பசி இல்லாமல், மாடுகள் மெலிந்து காணப்படும். சாணம், ஆட்டு புழுக்கை போல் உலர்ந்த நிலையில் இருக்கும். சில சமயங்களில், மாடுகள் தள்ளாடும்; கண்ணில் படும் பொருட்களை எல்லாம் நக்கும்.மாடுகளின் வாயில், உமிழ் நீர் வழிந்து காணப்படும். பாலில், அழுகிய பழ ரசத்தின் துர்நாற்றம் வீசும். இதுபோன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டால், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவரை நாடலாம். மேலும், சத்தான தீவனம் வழங்குவதன் மூலமாக, கீட்டோன் சொறிவு நோயை தடுக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.75300 52315

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X