மரக்கிளை உடைந்து விழுந்து கேபிள் ஆபரேட்டர் பலி

Added : நவ 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி : திருக்கனூர் மெயின் ரோட்டில் மரத்தை வெட்டியபோது, கிளை உடைந்து விழுந்ததில் கேபிள் ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.புதுச்சேரி அடுத்த, திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம், நாராயணசாமி நகர், பெருமாள் நகர் உள்ளது. இப்பகுதிக்கு, டி.வி.மலை மெயின் ரோட்டில் இருந்து, போலீஸ் ஸ்டேஷன் அருகிலுள்ள சாலை வழியாக மக்கள் சென்று வருவர்.இந்த சாலை சந்திப்பில் உள்ள

புதுச்சேரி : திருக்கனூர் மெயின் ரோட்டில் மரத்தை வெட்டியபோது, கிளை உடைந்து விழுந்ததில் கேபிள் ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே இறந்தார்

.புதுச்சேரி அடுத்த, திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம், நாராயணசாமி நகர், பெருமாள் நகர் உள்ளது. இப்பகுதிக்கு, டி.வி.மலை மெயின் ரோட்டில் இருந்து, போலீஸ் ஸ்டேஷன் அருகிலுள்ள சாலை வழியாக மக்கள் சென்று வருவர்.இந்த சாலை சந்திப்பில் உள்ள பழமையான புளிய மரத்தால், இருசக்கர வாகனத்தை தவிர கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை.

இதனால் புளிய மரத்தை வெட்ட அப்பகுதி மக்கள் முடிவு செய்து, புதுச்சேரி வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில், அந்த புளிய மரத்தை நேற்று முன்தினம் இரவு 10:00 மணி அளவில் தனி நபர்கள் சிலர் வெட்டி உள்ளனர்.அப்போது, திருக்கனுார் வணிகர் வீதியை சேர்ந்த கேபிள் டிவி ஆப்ரேட்டர் சேகர், 55; மரத்தின் அருகில் நின்று, அந்த பக்கமாக செல்லும் கேபிள் ஒயர்களை கண்காணித்துக் கொண்டிருந்தார். வெட்டப்பட்ட புளியமரத்தின் மெகா சைஸ் கிளை ஒன்று, அருகில் உள்ள மற்றொரு புளிய மரத்தின் கிளை மீது விழுந்தது.

இதனால், அந்த கிளை உடைந்து, கீழே நின்றிருந்த சேகர் தலையில் விழுந்தது. இதில் படுகாயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.திருக்கனூர் போலீசார் சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இறந்த சேகரின் உறவினர்கள், ''முறையான அனுமதி பெற்று இருந்தால் மரத்தை ஏன் இரவில் வெட்ட வேண்டும். உரிய பாதுகாப்பு, அரசு ஊழியர்கள் யாரும் இல்லாமல் தனி நபர்கள் மரத்தை வெட்டியதால் விபத்து நடந்துள்ளது. விபத்து ஏற்பட்டு இறப்பிற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X