பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் ஆய்வுக்கு பின் வேகமெடுக்கும் கோவில் பணி

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருப்போரூர் : அறநிலையத் துறை அமைச்சர் ஆய்வுக்கு பின், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், பக்தர்கள் வசதிக்காக கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு திறக்காத திருமண மண்டபம் உள்ளிட்ட கட்டடங்களில், விடுபட்ட பணிகள் வேகமெடுக்கின்றன.திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், கிருத்திகை, ஆடிப்பூரம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் குவியும்.முகூர்த்த நாட்களில்,

இக்கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெறும். தவிர தனியார் மண்டபங்களில் திருமணங்களைச் செய்த மணமக்கள், உறவினர்கள், கந்தசுவாமி கோவிலுக்கு வந்து சுவாமியை தரிசித்து செல்வர்.வெளியிடங்களில் திருமணம் செய்ய அதிக செலவாவதால், கோவிலுக்கென சொந்தமாக திருமண மண்டபம் கட்ட வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.இதையடுத்து ஹிந்து அறநிலையத் துறை சார்பில், 2014ல், கோவில் அருகே நெம்மேலி சாலையில் 95 லட்சம் ரூபாயில் திருமண மண்டபம் கட்டப்பட்டது.தவிர 53 லட்சம் ரூபாயில் பக்தர்கள் ஓய்வு விடுதி 60 லட்சம் ரூபாயில் பக்தர்கள் ஓய்வுக்கூட வளாகம் ஆகியவை கட்ட திட்டமிட்டு, கட்டுமானப் பணிகள் 2016ல் முடிந்தன.பணி முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் ஓய்வுக்கூடம், தங்கும் விடுதி, திருமண மண்டபம் ஆகியவை திறக்கப்படவில்லை.இந்நிலையில், ஜூலை மாதம் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன், இக்கோவிலில் ஆய்வு செய்தனர்.அப்போது பக்தர்களுக்கான கட்டடங்கள் மூடி கிடப்பதை பார்த்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.தொடர்ந்து விடுபட்ட அனைத்து பணிகளையும் முடித்து மூன்று மாதங்களில் திறக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.தொடர்ந்து திருமண மண்டபத்திற்கான புதிய கழிப்பறை கட்டுதல், சமையலறை விரிவுபடுத்தல், தண்ணீர் வசதி, வண்ணம் அடித்தல், துாய்மைப்படுத்துதல் போன்ற பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றனர்.அனைத்து கட்டட பணிகளும் முடிந்து, விரைவில் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X