நெட்டப்பாக்கத்தில் அமைச்சர் ஆய்வு

Added : நவ 24, 2021
Share
Advertisement
நெட்டப்பாக்கம் : மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.புதுச்சேரியில் பெய்த கனமழையால் நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மடுகரை, கரியமாணிக்கம், சூரமங்கலம், பண்டசோழநல்லுார், கரையாம்புத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் விளைநிலங்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்தன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள்
 நெட்டப்பாக்கத்தில் அமைச்சர் ஆய்வு

நெட்டப்பாக்கம் : மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.புதுச்சேரியில் பெய்த கனமழையால் நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மடுகரை, கரியமாணிக்கம், சூரமங்கலம், பண்டசோழநல்லுார், கரையாம்புத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் விளைநிலங்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்தன.

இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.இதையடுத்து, நெட்டப்பாக்கம் தொகுதியில் சேதமடைந்த சாலைகளை சரிசெய்ய தொகுதி எம்.எல்.ஏ.,வும், துணை சபாநாயகருமான ராஜவேலு பொதுப்பணித்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். நெட்டப்பாக்கம் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள், நிலங்களை அமைச்சர் லட்சுமிநாராயணன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சேதமடைந்த சாலைகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் வடிகால் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக உத்தரவிட்டார்.பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X