பொது செய்தி

தமிழ்நாடு

வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு பறவைகள் வரத்து குறைவு

Added : நவ 24, 2021
Share
Advertisement
மதுராந்தகம் : வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு, இந்த ஆண்டிற்கான சீசனில் இதுவரை, குறைவான அளவு பறவைகளே வந்துள்ளன.மதுராந்தகம் அருகே, வேடந்தாங்கலில் பறவைகள் சரணாலயம் உள்ளது. 10 ஆயிரம் பறவைகள்ஆண்டுதோறும் அக்., - நவ., மாதங்களில், ஆஸ்திரேலியா, பர்மா, பாகிஸ்தான், வங்க தேசம், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து, 26 வகையான 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்து தங்கி,

மதுராந்தகம் : வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு, இந்த ஆண்டிற்கான சீசனில் இதுவரை, குறைவான அளவு பறவைகளே வந்துள்ளன.மதுராந்தகம் அருகே, வேடந்தாங்கலில் பறவைகள் சரணாலயம் உள்ளது.

10 ஆயிரம் பறவைகள்ஆண்டுதோறும் அக்., - நவ., மாதங்களில், ஆஸ்திரேலியா, பர்மா, பாகிஸ்தான், வங்க தேசம், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து, 26 வகையான 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்து தங்கி, இனப்பெருக்கம் செய்யும். மே, ஜூன் மாதங்களில், சொந்த நாட்டிற்கு திரும்ப செல்லும்.இந்த ஆண்டிற்கான பருவ மழை துவங்கி, கடந்த வாரங்களில் கன மழை பெய்தது.

இதைஅடுத்து, வேடந்தாங்கல் ஏரி அதன் முழு கொள்ளளவான 16 அடியை எட்டி, உபரி நீர் வெளியேறி வருகிறது.ஏரி நிரம்பியும் வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு, இந்த சீசனுக்கு 10 ஆயிரத்திற்கும் குறைவான பறவைகளே வந்துள்ளன.மதுராந்தகம் வனச்சரக அலுவலர் லெஸ்லி கூறியதாவது:நத்தை கொத்தி நாரை, சாம்பல் நிற கூழாக்கடா, உன்னிகொக்கு, சிறிய வெண்கொக்கு, ஒர்க்கா, மீன் கொத்தி உள்ளிட்ட வகைகளை சார்ந்த 10 ஆயிரம் பறவைகளே வந்து சேர்ந்துள்ளன.எதிர்பார்ப்புஇந்த சீசன் காலத்திற்கு பறவைகளின் எண்ணிக்கை குறைவு தான். இம்மாத இறுதியில், கணிசமான எண்ணிக்கையிலான பறவைகள் வந்து சேரும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X