அரசியல் கட்சியினர் கோரிக்கை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசியல் கட்சியினர் கோரிக்கை

Added : நவ 24, 2021
Share
செங்கல்பட்டு, : செங்கல்பட்டு மாவட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்குமுறை திருத்தம் - 2022க்கான ஆய்வு கூட்டம், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் அனில் மேஷ்ராம் தலைமையில், செங்கல்பட்டில் நேற்று நடந்தது.மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வம், வருவாய் கோட்டாட்சியர்கள் சரஸ்வதி, சாகிதா பர்வீன்
 அரசியல் கட்சியினர் கோரிக்கை

செங்கல்பட்டு, : செங்கல்பட்டு மாவட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்குமுறை திருத்தம் - 2022க்கான ஆய்வு கூட்டம், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் அனில் மேஷ்ராம் தலைமையில், செங்கல்பட்டில் நேற்று நடந்தது.மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வம், வருவாய் கோட்டாட்சியர்கள் சரஸ்வதி, சாகிதா பர்வீன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

தொடர்ந்து தேர்தல் பார்வையாளர் அனில் மேஷ்ராம் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில், அ.தி.மு.க., மாவட்ட செயலர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் பேசுகையில், ''திருக்கழுக்குன்றம் ஒன்றியம், நடுவக்கரை ஊராட்சி, இரண்டு தொகுதிகளில் வருகிறது. இதை ஒரே தொகுதியாக மாற்ற வேண்டும்.வாக்காளர் பட்டியலில் இறந்தோர், வெளியூர் சென்றோரின் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளது. இவற்றை நீக்க வேண்டும்,'' என்றார்.வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அனில் மேஷ்ராம், ''அரசியில் கட்சி நிர்வாகிகள், வாக்காளர் பட்டியலில் கூறிய திருத்தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X