பொது செய்தி

தமிழ்நாடு

11 மாதங்களில் 35 போலீசார் தற்கொலை: முற்றுப்புள்ளி வைக்க கவுன்சிலிங் கட்டாயம்

Updated : நவ 24, 2021 | Added : நவ 24, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
மதுரை: இந்தாண்டு 11 மாதங்களில் தமிழக போலீஸ் துறையில் பல்வேறு காரணங்களுக்காக 35 போலீசார் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அடுத்தடுத்து தற்கொலை செய்வதை தடுக்க போலீசாருக்கு 'கவுன்சிலிங்' அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பணி அழுத்தம், குடும்ப பிரச்னை, ஆன்லைன் விளையாட்டில் பண இழப்பு போன்ற காரணங்களால் போலீசார் தொடர்ந்து தற்கொலை செய்து வருகின்றனர். கடந்த 10 மாதங்களில் 30
cops,Police,suicide,counseling

மதுரை: இந்தாண்டு 11 மாதங்களில் தமிழக போலீஸ் துறையில் பல்வேறு காரணங்களுக்காக 35 போலீசார் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அடுத்தடுத்து தற்கொலை செய்வதை தடுக்க போலீசாருக்கு 'கவுன்சிலிங்' அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணி அழுத்தம், குடும்ப பிரச்னை, ஆன்லைன் விளையாட்டில் பண இழப்பு போன்ற காரணங்களால் போலீசார் தொடர்ந்து தற்கொலை செய்து வருகின்றனர். கடந்த 10 மாதங்களில் 30 பேரும், இம்மாதத்தில் நேற்று வரை 5 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பெரும்பாலும் குடும்ப பிரச்னையால்தான் இம்முடிவை எடுத்துள்ளனர். இதேபோல் உடல்நலம் பாதிப்பு, விபத்து போன்றவைகளிலும் போலீசார் இறந்து வருவது சக போலீசாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


latest tamil news


இந்தாண்டு ஜன.,ல் 29 போலீசார், பிப்., ல் 22, மார்ச்சில் 27, ஏப்.,ல் 48, மே 83, ஜூன் 26, ஆக., 25, செப்., 35, அக்., ல்24 போலீசார் இறந்துள்ளனர். இதில் ஒரு போலீஸ்காரர் வீரமரணம் அடைந்தவர். கொலை 1, கொரோனா 80, மாரடைப்பு 48, மர்மசாவு 4, விபத்து 57, உடல்நலம் பாதிப்பு 112, புற்றுநோய் 20, பாம்பு கடிக்கு ஒருவர் என மொத்தம் 354 பேர் இறந்துள்ளனர்.

போலீஸ் அதிகாரி கூறுகையில், ''போலீசாரின் தற்கொலையை தடுக்க துறை சார்பில் 2 ஆண்டுகளாக மனநலம் தொடர்பான 'கவுன்சிலிங்' கொடுக்கப்பட்டு வருகிறது. அவர்களின் குடும்பத்தினருக்கும் கொடுக்கப்படுகிறது. இதன்மூலம் போலீசாரின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு, பணியில் கவனம் செலுத்த துவங்கினர். எனவே 'கவுன்சிலிங்' கொடுப்பதை இன்னும் தீவிரப்படுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும்'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thonipuramVijay - Chennai,யூ.எஸ்.ஏ
24-நவ-202123:26:06 IST Report Abuse
thonipuramVijay உயரதிகாரிகளின் மரியாதையற்ற திட்டுக்கள், வரைமுறையற்ற நீண்ட பணிநேரம், உடல் ஆரோக்யத்தை பேணாமை போன்றவை தான் முக்கிய காரணங்கள் ....இன்னும் மிக முக்கியமானது.. உயரதிகாரிகளின் வீட்டில் கொடுமையான எடுபுடி வேலைக்கு வற்புறுத்துவது.. போலீசுக்கு எதிரி இன்னொரு போலீசே
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
24-நவ-202116:51:27 IST Report Abuse
DVRR என்னது??? பதவியேற்று 7 மாசம் ஆகப்போறது மடியல் அரசுக்கு அதுக்குள்ளே போலிஸில் இவ்வளவு தற்கொலையா?????
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
24-நவ-202114:02:59 IST Report Abuse
அசோக்ராஜ் கவுன்சலிங்கினால் பயன் இருக்காது. ஒவ்வொரு காக்கியும் லஞ்சம் வாங்குவதையும் கொடுப்பதையும் நிறுத்தி விட்டு சம்பளத்துக்குள் செலவைக் குறுக்கி வாழ்ந்தால் போதும். தன்மானமும் தன்னம்பிக்கையும் கூடும். சுய கவுரவம் பெருகும். தற்கொலை எண்ணம் அறவே வராது. உங்களுக்கு வேண்டியது அடிப்படை ஒழுக்கம் மிஸ்டர் அண்ட் மிஸ் காக்கி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X