தமிழ்நாடு

ஆற்றில் சென்ற மின் கம்பங்கள் மாற்றி யோசித்த அதிகாரிகள்

Added : நவ 24, 2021
Share
Advertisement
உத்திரமேரூ : திருமுக்கூடல் பாலாற்றில் ஏற்பட்ட, காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மின்தட கம்பிகள் மற்றும் மின்கம்பங்களுக்கு மாற்றாக, உயர்மட்ட பாலத்தின் வழியாக புதிய மின்தட பாதை அமைத்து, மின் வாரியத்தினர் மின்சாரம் வினியோகித்தனர்.திருமுக்கூடல் பாலாற்றில், கடந்த வாரம் கரைபுரண்டு ஓடிய காட்டாற்று வெள்ளத்தால், பழையசீவரம் துணை மின் நிலையத்தில் இருந்து,
 ஆற்றில் சென்ற மின் கம்பங்கள் மாற்றி யோசித்த அதிகாரிகள்

உத்திரமேரூ : திருமுக்கூடல் பாலாற்றில் ஏற்பட்ட, காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மின்தட கம்பிகள் மற்றும் மின்கம்பங்களுக்கு மாற்றாக, உயர்மட்ட பாலத்தின் வழியாக புதிய மின்தட பாதை அமைத்து, மின் வாரியத்தினர் மின்சாரம் வினியோகித்தனர்.

திருமுக்கூடல் பாலாற்றில், கடந்த வாரம் கரைபுரண்டு ஓடிய காட்டாற்று வெள்ளத்தால், பழையசீவரம் துணை மின் நிலையத்தில் இருந்து, பாலாற்றின் வழியாக திருமுக்கூடல் துணை மின் நிலையத்திற்கு செல்லும், 33 கே.வி., மின்வழித்தட கம்பிகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட கம்பங்கள், ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டன.இதனால், திருமுக்கூடல், பழவேரி, அருங்குன்றம் மற்றும் அதை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 19, 20 ஆகிய நாட்களின் மின்தடை ஏற்பட்டது.

ஆலோசனை

கிராமத்தினர் மொபைல் போனில் சார்ஜ் போடுவதற்கு கூட மின்வசதி இல்லாமலும், மழை பாதிப்பு குறித்து அறிந்துகொள்ள 'டிவி'யை பார்க்க முடியாமலும், இரு நாட்களை இருளிலேயே கழித்தனர்.அங்கு ஏற்பட்ட மின்தடையை சீரமைக்க, காஞ்சிபுரம் மின் வாரிய தெற்கு கோட்டம் மேற்பார்வை பொறியாளர் பிரசாத், செயற்பொறியாளர் சரவணதங்கம், உதவி செயற்பொறியாளர் ஏழுமலை உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

ஆற்றில் வெள்ளம் குறைந்து, மின்கம்பம் நடவு செய்து, கிராமங்களுக்கு மீண்டும் மின் வினியோகம் வழங்குவதற்கு, காலதாமதம் ஆகும் என்பதால், திருமுக்கூடல் மேம்பாலத்தின் வழியாக மின்தட பாதை அமைக்க முடிவு செய்தனர்.அதன்படி, சென்னையில் இருந்து பிரத்யேகமாக புதைவட மின் கம்பி வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து திருமுக்கூடல், நெல்வாய் பிரிவு உதவி பொறியாளர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள், இரவு - பகலாக சுழற்சி முறையில், இடைவெளி இல்லாமல் பணிபுரிந்தனர்.

சீரான மின்சாரம்

பாலாற்று வழியாக சென்ற மின்தட பாதைக்கு பதிலாக, பழைய சீவரம் பாலாற்று உயர்மட்ட பாலத்தின் வழியாக, கேபிள் அமைக்கும் பணியை துவக்கினர்.மின்தடை ஏற்பட்ட நவ., 19, 20 என, இரு நாட்களில் பணியை முடித்து, பழையசீவரம் துணை மின் நிலையத்திலிருந்து திருமுக்கூடல் துணை மின் நிலையத்திற்கு புதிய மின்தட பாதை அமைத்து மின்சாரம் வழங்கினர். 10க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு, சீரான மின்சாரம் வழங்கினர்.ஆற்றில் வெள்ளம் வடிவது எப்போது, நமக்கு தடையின்றி மின்சாரம் கிடைப்பது எப்போது என, ஆதங்கப்பட்ட கிராமவாசிகளுக்கு, மகிழ்ச்சி அளிக்கும் வகையில், மாற்றி யோசித்த மின்வாரிய அதிகாரிகளின் நடவடிக்கைக்கு, பொதுமக்கள், அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X