தமிழ்நாடு

சிறுமிக்கு 'சில்மிஷம்' வடமாநிலத்தவர் கைது

Added : நவ 24, 2021
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார், : ஸ்ரீபெரும்புதுார் அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில இளைஞர், நேற்று கைது செய்யப்பட்டார்.பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர், தன் மனைவி மற்றும் குழந்தையுடன், ஸ்ரீபெரும்புதுார் அருகே, மாத்துாரில் தங்கி பணியாற்றி வந்தார்.இவரது ஐந்து வயது மகள், நேற்று முன்தினம், வீட்டில் தனியாக இருந்தார். அங்கு வந்த பீஹார் மாநிலத்தைச்

ஸ்ரீபெரும்புதுார், : ஸ்ரீபெரும்புதுார் அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில இளைஞர், நேற்று கைது செய்யப்பட்டார்.

பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர், தன் மனைவி மற்றும் குழந்தையுடன், ஸ்ரீபெரும்புதுார் அருகே, மாத்துாரில் தங்கி பணியாற்றி வந்தார்.இவரது ஐந்து வயது மகள், நேற்று முன்தினம், வீட்டில் தனியாக இருந்தார். அங்கு வந்த பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த பைஜன், 21, என்ற இளைஞர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

நடந்தது குறித்து, பெற்றோரிடம் சிறுமி கூறியதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் அருகே, தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளித்த பெற்றோர், இதுகுறித்து ஸ்ரீபெரும்புதுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார், பைஜனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X