பொது செய்தி

தமிழ்நாடு

வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால் மழை பெய்தும் நிரம்பாத காக்களூர் ஏரி

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருவள்ளூர் : காக்களூர் ஏரிக்கு வரும் மழை நீர், கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக, பலத்த மழை பெய்தும், தண்ணீர் வராததால் நிரம்பவில்லை.திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகில் உள்ளது காக்களூர் ஏரி. திருவள்ளூர் நகராட்சி மற்றும் காக்களூர் ஊராட்சிக்கு நடுவில், இந்த ஏரி உள்ளது. இந்த ஏரி, 200 ஏக்கர் பரப்பு கொண்டது. 20 ஆண்டுகளுக்கு முன், இந்த ஏரியை நம்பி, இப்பகுதியைச் சுற்றிலும் உள்ள,
 வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால் மழை பெய்தும் நிரம்பாத காக்களூர் ஏரி

திருவள்ளூர் : காக்களூர் ஏரிக்கு வரும் மழை நீர், கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக, பலத்த மழை பெய்தும், தண்ணீர் வராததால் நிரம்பவில்லை.

திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகில் உள்ளது காக்களூர் ஏரி. திருவள்ளூர் நகராட்சி மற்றும் காக்களூர் ஊராட்சிக்கு நடுவில், இந்த ஏரி உள்ளது. இந்த ஏரி, 200 ஏக்கர் பரப்பு கொண்டது. 20 ஆண்டுகளுக்கு முன், இந்த ஏரியை நம்பி, இப்பகுதியைச் சுற்றிலும் உள்ள, 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் விவசாயம் நடந்து வந்தது.நகருக்கு அருகில் அமைந்துள்ளதால், காக்களூர் ஏரியைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் குடியிருப்பு வீடுகள் அதிகரித்து விட்டன.

இதன் காரணமாக, விவசாய நிலங்கள் அனைத்தும், வீட்டு மனைகளாக மாறிவிட்டன.தற்போது, காக்களூர் ஏரியும், ஆக்கிரமிப்பால் சுருங்கி விட்டது. இந்த ஏரிக்கு, திருவள்ளூர் ரயில் நிலையம் பகுதியில் இருந்து, பெரியகுப்பம், அய்யனார் அவென்யூ, வி.எம்., நகர், வீட்டு வசதி குடியிருப்பு வழியாக, பொதுப்பணி துறை கால்வாய் இணைகிறது.மேற்கண்ட பகுதியில் பெய்யும் மழை நீர், இக்கால்வாய் வழியாக, காக்களூர் ஏரியை வந்தடையும்.அதே போல் கலெக்டர் அலுவலக பகுதி, சி.வி.நாயுடு சாலை பகுதியில் கிடைக்கும் மழை நீர், பேருந்து நிலையம் வழியாக, காக்களூர் ஏரிக்கு வரும்.இவ்விரண்டு கால்வாய்களும், ஆக்கிரமிப்பு காரணமாக சுருங்கி விட்டன. இதன் காரணமாக, இந்த ஏரி, மழைக் காலத்தில் தண்ணீர் வரத்து இல்லாமல் முழுதும் நிரம்புவதில்லை.இந்த நிலையில், திருவள்ளூர் நகரில், இருபது நாட்களாக பலத்த மழை பெய்தும், வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால், காக்களூர் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாமல், முழுதும் நிரம்பாமல் உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'காக்களூர் ஏரி நிரம்பினால், திருவள்ளூர் நகரம் மற்றும் காக்களூர் ஊராட்சி உள்ளிட்ட, சுற்றுப் பகுதிகளில், நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும். வீரராகவர் கோவில் குளத்திற்கும், இங்கிருந்து தண்ணீர் செல்லும். 'நிலத்தடி நீராதாரம் பாதுகாக்க, பொதுப்பணி துறையினர், ஏரிக்கு வரும் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றியும், ஏரியை துார் வாரியும் சீரமைக்க வேண்டும்' என்றனர்.மதகு சீரமைக்கவில்லைகாக்களூர் ஏரி நிரம்பினால், உபரி நீர் வெளியேறும் வகையில், இரண்டு இடங்களில், மதகு அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2015ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறும் மதகு சேதமடைந்தது. தற்போது வரை, இந்த மதகு சீரமைக்கப்படாமல் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X