தமிழ்நாடு

போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
கடலுார் : பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி, கடலுாரில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகங்களின் பற்றாக்குறையை ஈடுகட்ட, அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உட்பட பல
 போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரத  போராட்டம்

கடலுார் : பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி, கடலுாரில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகங்களின் பற்றாக்குறையை ஈடுகட்ட, அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலுார் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

சம்மேளன தலைவர் முத்து தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கதிர்வேல், ராமதாஸ், அய்யனார் முன்னிலை வகித்தனர்.வடலுார்வடலுாரில் சி.ஐ.டி.யூ., போக்குவரத்து கழக தொழிற்சங்கம் சார்பில் நடந்த உண்ணாவிரதத்திற்கு பணிமனை தலைவர் உத்திராபதி தலைமை தாங்கினார். மத்திய சங்க துணை செயலாளர் முருகன், துணை தலைவர் சந்திரகுமார், நிர்வாகிகள் முத்துக்குமரன், வள்ளல், ஜான்விக்டர் உட்பட பலர் பங்கேற்றனர்.விருத்தாசலம்விருத்தாசலம் போக்குவரத்து பணிமனை முன் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் நாராயணசாமி, மண்டல துணை தலைவர் கிருஷ்ணசாமி, மண்டல செயலர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X