பொது செய்தி

தமிழ்நாடு

குண்டும், குழியுமான ஏரிக்கரை சாலை

Added : நவ 24, 2021
Share
Advertisement
அதிகத்துார் : அதிகத்துார் ஊராட்சியில் நிதி ஒதுக்கியும் ஏரிக்கரை சாலை சீரமைக்காததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகி்னறனர்.கடம்பத்துாரிலிருந்து கூவம் ஆற்றைக் கடந்து, அதிகத்துார் ஏரிக்கரை வழியே, மணவாள நகர் செல்லும் ஒன்றிய சாலை உள்ளது. இந்த சாலையை, தினமும், 500க்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர்.இந்த சாலையில், அதிகத்துார் ஏரிக்கரை சாலை

அதிகத்துார் : அதிகத்துார் ஊராட்சியில் நிதி ஒதுக்கியும் ஏரிக்கரை சாலை சீரமைக்காததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகி்னறனர்.

கடம்பத்துாரிலிருந்து கூவம் ஆற்றைக் கடந்து, அதிகத்துார் ஏரிக்கரை வழியே, மணவாள நகர் செல்லும் ஒன்றிய சாலை உள்ளது. இந்த சாலையை, தினமும், 500க்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர்.இந்த சாலையில், அதிகத்துார் ஏரிக்கரை சாலை மிகவும் சேதமடைந்து, குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இயைதடுத்து கடந்த ஜூலை மாதம் நடந்த ஒன்றிய குழு கூட்டத்தில் ஏழு லட்சம் செலவில் சாலை சீரமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால் இன்று வரை சாலை சீரமைக்கப்படாமல் உள்ள பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர் ஏரிக்கரை சாலையை சீரமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X