பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் ஆபீசா, கால்நடை பார்க்கா! குரங்கு, மாடு, நாய்கள்... 'ஜாலி உலா'

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருவள்ளூர் : திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாடு, குரங்கு, நாய் என, விலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருவள்ளூர் - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பொதுமக்கள், பல்வேறு குறைகள் குறித்து தீர்வு கோரி, கலெக்டர் அலுவலகத்திற்கு

திருவள்ளூர் : திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாடு, குரங்கு, நாய் என, விலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருவள்ளூர் - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பொதுமக்கள், பல்வேறு குறைகள் குறித்து தீர்வு கோரி, கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். அலுவலக வளாகத்தில், வளர்ந்துள்ள புற்களை உண்ண, மாடுகள் அதிகளவில் வந்து செல்கின்றன.

இவற்றுடன், குரங்குகள், நாய்களும் அதிகளவில் உள்ளன.இதன் காரணமாக, பொதுமக்கள், குறைகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி, மனு அளிக்க வரும் போது, இவற்றால் அவதிப்படுகின்றனர்.குரங்குகள், பொதுமக்கள் உண்ணும் உணவினை மிரட்டி, பறித்துச் செல்கின்றன. நாய்கள், கூட்டமாக கூடி, சத்தம் போட்டு, பொதுமக்களை மிரட்டுகின்றன. இத்துடன், மாடுகளும், சர்வ சாதாரணமாக, கலெக்டர் அலுவலகத்தில் உலா வருகின்றன.

இதன் காரணமாக, கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், 'இது கலெக்டர் அலுவலகமா... அல்லது, கால்நடைகள் சரணாலயமா...' என, பேசும் நிலையில் உள்ளது.மாவட்ட நிர்வாகம், கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் சுற்றித்திரியும் விலங்கினங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கும், என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X