சேதம் அடைந்த பள்ளி கட்டடம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேதம் அடைந்த பள்ளி கட்டடம்

Added : நவ 24, 2021
Share
பள்ளிப்பட்டு : அரசு பள்ளியின் மூன்றடுக்கு வகுப்பறை கட்டடம் சேதம் அடைந்தது குறித்து அதிகாரிகள் நேற்று நேரடி ஆய்வு மேற்கொண்டனர். பொதுப்பணித் துறையினருடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட பணிகளை விரைவில் துவக்க உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த, சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், 10 வகுப்பறைகள் கொண்ட மூன்றடுக்கு கட்டடம் நேற்று முன்தினம் ஆட்டம்

பள்ளிப்பட்டு : அரசு பள்ளியின் மூன்றடுக்கு வகுப்பறை கட்டடம் சேதம் அடைந்தது குறித்து அதிகாரிகள் நேற்று நேரடி ஆய்வு மேற்கொண்டனர். பொதுப்பணித் துறையினருடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட பணிகளை விரைவில் துவக்க உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த, சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், 10 வகுப்பறைகள் கொண்ட மூன்றடுக்கு கட்டடம் நேற்று முன்தினம் ஆட்டம் கண்டது.அடித்தளத்தில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பு காரணமாக, 200 சதுர அடி பரப்பில், 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து திருத்தணி மாவட்ட கல்வி அதிகாரி அருளரசு நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு, ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

திருத்தணி கோட்டாட்சியர் சத்யா, நேற்று பள்ளியில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.கொசஸ்தலை ஆற்றில் இருந்து பள்ளி வளாகத்திற்கு வெள்ளம் வருவதற்கான வழியை கண்டறிந்து, அந்த பகுதியில் உடனடியாக தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து, பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமாருடன் ஆலோசனை நடத்தினார்.அதன் படி, பள்ளிக்கு மேற்கு பகுதியில் கரையை வலுப்படுத்த உத்தரவிட்டார். மேலும், பள்ளியில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.இதர அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, சேதம் அடைந்துள்ள கட்டடத்தை சரி செய்ய முடியுமா அல்லது இடித்து விட்டு, புதிதாக கட்ட வேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X