பொது செய்தி

தமிழ்நாடு

அரசு போக்குவரத்து கழக ஊதிய பேச்சு வார்த்தை

Added : நவ 24, 2021
Share
Advertisement
விழுப்புரம் : தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஊதிய பேச்சு வார்த்தையை உடனே துவங்க கோரி உண்ணாவிரதம் விழுப்புரத்தில் நடைபெற்றது.விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அலுவலகம் 2, 3 முன்பு நடந்த போராட்டத்திற்கு, பணிமனை செயலாளர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார்.சி.ஐ.டி.யூ., மண்டல தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார். மத்திய சங்க துணை தலைவர்

விழுப்புரம் : தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஊதிய பேச்சு வார்த்தையை உடனே துவங்க கோரி உண்ணாவிரதம் விழுப்புரத்தில் நடைபெற்றது.

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அலுவலகம் 2, 3 முன்பு நடந்த போராட்டத்திற்கு, பணிமனை செயலாளர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார்.சி.ஐ.டி.யூ., மண்டல தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார். மத்திய சங்க துணை தலைவர் இளம்பாரதி, பொது செயலாளர் ரகோத்தமன் கண்டன உரையாற்றினர்.ஓய்வு பெற்றோர் அமைப்பு துணை தலைவர் கல்ராயன், துணை பொது செயலாளர் ஏழுமலை உள்பட பலர் பங்கேற்றனர்.ஊதிய பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்குதல், ஓய்வு பெற்றோர் பணப்பலன், அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு அமல்படுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டம் கைவிடுதல் உள்பட பல கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.பணிமனை தலைவர் உத்ரமூர்த்தி நன்றிகூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X