ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதி முற்றிலும் சேதம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அருகே, ஏனாமேல்பாக்கம் கிராமத்தில், ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதியில், 400 மீட்டர் தெரு உள்ளது. பல ஆண்டுகளாக அந்த தெருவை ஒன்றிய நிர்வாகம் கண்டுக்கொள்ளாததால், குண்டும், குழியுமாக மாறியது.தற்போது, தொடர் மழையால் அந்த சாலை முற்றிலும் சேதமடைந்து சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால், அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடும் சிரமத்திற்கு

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அருகே, ஏனாமேல்பாக்கம் கிராமத்தில், ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதியில், 400 மீட்டர் தெரு உள்ளது. பல ஆண்டுகளாக அந்த தெருவை ஒன்றிய நிர்வாகம் கண்டுக்கொள்ளாததால், குண்டும், குழியுமாக மாறியது.தற்போது, தொடர் மழையால் அந்த சாலை முற்றிலும் சேதமடைந்து சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.

இதனால், அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், கிராம பெண்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக, நேற்று, அந்த சாலையில் உள்ள சேற்றில் நாற்று நடும் போராட்டத்தை மேற்கொண்டனர்.அதேபோன்று, அங்கிருந்து, எடப்பாளையம், பன்பாக்கம், கிளிக்கோடி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையான முதலியார் தெருவையும் சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், கிராம பெண்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X