பொது செய்தி

தமிழ்நாடு

ஆபத்து! பஸ் படியில் பயணிக்கும் மாணவர்கள்; எஸ்.பி., உத்தரவு காற்றில் பறந்தது

Added : நவ 24, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் நகரில் பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் அவலம் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவதில் போலீசார் அலட்சியம் காட்டி வருகின்றனர்.விழுப்புரம் நகரில் அரசு ஆண்கள், பெண்கள் மற்றும் அரசு கலைக்கல்லுாரிகள், சட்டக்கல்லுாரி மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகள் அதிகளவில் உள்ளன. இதனால், விழுப்புரம் நகரை சுற்றியுள்ள
 ஆபத்து!    பஸ் படியில் பயணிக்கும் மாணவர்கள்;   எஸ்.பி., உத்தரவு காற்றில் பறந்தது

விழுப்புரம் : விழுப்புரம் நகரில் பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் அவலம் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவதில் போலீசார் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

விழுப்புரம் நகரில் அரசு ஆண்கள், பெண்கள் மற்றும் அரசு கலைக்கல்லுாரிகள், சட்டக்கல்லுாரி மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகள் அதிகளவில் உள்ளன. இதனால், விழுப்புரம் நகரை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள், விழுப்புரம் நகருக்கு வந்து செல்கின்றனர்.கிராமப்புறங்களில் இருந்து காலை, மாலை அலுவல் நேரத்தில் குறிப்பிட்ட சில பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றது. இதனால், அதிகளவு மாணவ, மாணவிகள் பஸ்களில் முண்டியடித்து ஏறும் நிலை ஏற்படுகிறது.

பஸ்சுக்குள் இடமின்றி ஆபத்தான நிலையில் படிக்கட்டில் நின்று பயணிக்க வேண்டியுள்ளது. பள்ளி வேலை நாட்களில் காலை, மாலை வேளைகளில் விழுப்புரத்திற்கு வந்து செல்லக்கூடியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பஸ்களில் தொங்கி பயணம் செய்யும் மாணவர்கள் மீது சாலைகளில் அதிவேகத்துடன் செல்லும் வேறு வாகனங்களில் மோதி விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.குறிப்பாக, விழுப்புரத்தில் இருந்து கப்பூர், திருவெண்ணெய்நல்லுார், பில்லுார் உள்ளிட்ட கிராமப்பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்களில் நாள்தோறும் மாணவர்கள் படியில் தொங்கியபடியும், கால்களை சாலையில் தீற்றியவாறு ஆபத்தான நிலையில் பயணிக்கின்றனர்.சில அரசு பஸ்களில் உள்ளே இடமிருந்தும், படியில் பயணம், நொடியில் மரணம் என்ற வாசகத்தை மறந்து மாணவர்கள் பந்தாவாக படிக்கட்டில் தொங்கிச்செல்கின்றனர்.விழுப்புரம் புதிய மற்றும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் அரசு பஸ்களின் படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் மாணவர்களை கட்டுப்படுத்த போலீசாருக்கு எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.

ஆனாலும், நகரில் உள்ள விழுப்புரம் மேற்கு, டவுன் மற்றும் டிராபிக் போலீசார் இதை கண்டுகொள்வதில்லை. எஸ்.பி., உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, போலீசார் அலட்சியமாக உள்ளனர்.இதேபோன்று, சில தினங்களுக்கு முன் பழைய பஸ் நிலையத்தில் கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார். அப்போது, அரசு பஸ்களில் அதிக மாணவர்கள் பயணிக்கும் வழித்தடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார்.போக்குவரத்து துறை அதிகாரிகள்

இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பஸ் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணிக்கும் நிலை தினசரி நீடித்து வருகின்றது. எனவே, பஸ் படிக்கட்டு பயணத்தினால் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், பள்ளி நேரங்களில் கிராமப்பகுதிகளுக்கான வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், பந்தாவிற்காக பஸ் படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் மாணவர்களை கட்டுப்படுத்த, எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X