பொது செய்தி

தமிழ்நாடு

வயல்வெளியில் மழை நீர்: விவசாயிகளுக்கு ஆலோசனை

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருத்தணி : தொடர் மழையால் வயல்வெளியில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற வடிகால் வசதி, நுண்ணுயிர் உரமிடுவது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் அலுவலர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.திருத்தணி ஒன்றியத்தில், சம்பா பருவத்தில், 742 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் பயிரிட்டிருந்தனர். இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை மற்றும் தொடர் மழையால் விவசாயிகள் நெற்பயிரில் மழை நீர் தேங்கி
 வயல்வெளியில் மழை நீர்: விவசாயிகளுக்கு ஆலோசனை

திருத்தணி : தொடர் மழையால் வயல்வெளியில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற வடிகால் வசதி, நுண்ணுயிர் உரமிடுவது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் அலுவலர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்

.திருத்தணி ஒன்றியத்தில், சம்பா பருவத்தில், 742 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் பயிரிட்டிருந்தனர். இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை மற்றும் தொடர் மழையால் விவசாயிகள் நெற்பயிரில் மழை நீர் தேங்கி நிற்கிறது.இதையடுத்து, திருத்தணி வேளாண் உதவி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள், 27 ஊராட்சிகளிலும், நெல் பயிரிட்ட விவசாயிகளின் நிலத்திற்கு நேரில் சென்றனர். அங்கு தேங்கிய மழை நீரை அகற்றுவதற்கு வடிகால் வசதி ஏற்படுத்தி, நுண்ணுயிர் உரங்கள் போடுவதற்கும், இலை வழியாக உரம் வழங்குவது போன்ற தொழிற்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்

.இது குறித்து திருத்தணி வட்டார துணை வேளாண் அலுவலர் ஏழுமலை கூறுகையில், 'வெள்ளத்தால் நெற்பயிர் சேதாரம் எவ்வளவு என்பது குறித்து மழை நீர் வடிந்த பின் தான் தெரிய வரும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X