தமிழ்நாடு

ரூ.1.50 கோடி செலவில் பாலம்; நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு

Added : நவ 24, 2021
Share
Advertisement
கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையம் அருகே, ஜி.என்.டி., சாலையின் குறுக்கே, ஏரியின் உபரி நீர் ஓடை செல்கிறது. அந்த இடத்தில் தரைப்பாலம் ஒன்று உள்ளது. ஒவ்வொரு மழைக் காலங்களிலும், அந்த தரைப்பாலத்தில், 3 அடி உயரத்திற்கு மழை வெள்ளம் பாய்வது வழக்கம்.அப்போது, போக்குவரத்து தடை ஏற்பட்டு, கும்மிடிப்பூண்டி நகரம் துண்டிக்கும் நிலை ஏற்படும். அந்த இடத்தில் பாலம் ஒன்றை

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையம் அருகே, ஜி.என்.டி., சாலையின் குறுக்கே, ஏரியின் உபரி நீர் ஓடை செல்கிறது. அந்த இடத்தில் தரைப்பாலம் ஒன்று உள்ளது.

ஒவ்வொரு மழைக் காலங்களிலும், அந்த தரைப்பாலத்தில், 3 அடி உயரத்திற்கு மழை வெள்ளம் பாய்வது வழக்கம்.அப்போது, போக்குவரத்து தடை ஏற்பட்டு, கும்மிடிப்பூண்டி நகரம் துண்டிக்கும் நிலை ஏற்படும். அந்த இடத்தில் பாலம் ஒன்றை அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாகமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதன்படி, 10 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம் கொண்ட பாலம் அமைக்க, மாநில நெடுஞ்சாலை துறையினர், 1.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளனர். மழைக்காலம் முடிந்தவுடன், பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என, நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X