பொது செய்தி

தமிழ்நாடு

கனமழையால் சேதமடைந்த பகுதிகளில் எம்.எல்.ஏ., பார்வை

Added : நவ 24, 2021
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனத்தில் மழையால் சேதமடைந்த இடங்களை எம்.எல்.ஏ., பார்வையிட்டார். திண்டிவனம் ராஜாங்குளம் ரூ. 1 கோடியில் சீரமைப்பு பணி கடந்த ஆட்சியின்போது துவங்கியது. இதுவரை 90 சதவீத பணிகள் முடிந்துள்ளது.இந்நிலையில், எம்.எல்.ஏ., அர்ஜூனன் ராஜாங்குளத்தை பார்வையிட்டார். நகராட்சி ஆணையர் சவுந்தர்ராஜன், பொறியாளர் பவுல்செல்வம், முன்னாள் சேர்மன் வெங்கடேசன், நகர அ.தி.மு.க.,

திண்டிவனம் : திண்டிவனத்தில் மழையால் சேதமடைந்த இடங்களை எம்.எல்.ஏ., பார்வையிட்டார். திண்டிவனம் ராஜாங்குளம் ரூ. 1 கோடியில் சீரமைப்பு பணி கடந்த ஆட்சியின்போது துவங்கியது.

இதுவரை 90 சதவீத பணிகள் முடிந்துள்ளது.இந்நிலையில், எம்.எல்.ஏ., அர்ஜூனன் ராஜாங்குளத்தை பார்வையிட்டார். நகராட்சி ஆணையர் சவுந்தர்ராஜன், பொறியாளர் பவுல்செல்வம், முன்னாள் சேர்மன் வெங்கடேசன், நகர அ.தி.மு.க., செயலாளர் தீனதயாளன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் சேகர், பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ், ஜெ., பேரவை நிர்வாகிகள் குமார், ரூபன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.சீரமைப்பு பணிகள் நிறைவடைவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்வதற்கு கலெக்டரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக எம்.எல்.ஏ.,விடம் நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

தொடர்ந்து எம்.எல்.ஏ., மழையால் சேதமடைந்த நாகலாபுரம் தரைப்பாலம், ஜெயபுரம் தரைப்பாலம் ஆகியவற்றை அதிகாரிகளுடன் பார்வையிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X