தமிழ்நாடு

ஏரியில் படகு சவாரி பாதுகாப்பு கேள்விக்குறி

Added : நவ 24, 2021
Share
Advertisement
பள்ளிப்பட்டு : பள்ளிப்பட்டு ஒன்றியம், பொதட்டூர்பேட்டை ஏரி மிக அரிதாகவே நிரம்பும். தற்போதைய மழையால், முழுதுமாக நிரம்பிஉள்ளது.இந்நிலையில், ஏரியில் ஏராளமான மீன்கள், தண்ணீருடன் அடித்து வரப்பட்டுள்ளன. இந்த மீன்களை பிடிப்பதில் கிராமத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இதற்காக, பைபர் படகு ஒன்றை, ஏரியில் இயக்கி வருகின்றனர். பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை வட்டாரத்தில்

பள்ளிப்பட்டு : பள்ளிப்பட்டு ஒன்றியம், பொதட்டூர்பேட்டை ஏரி மிக அரிதாகவே நிரம்பும். தற்போதைய மழையால், முழுதுமாக நிரம்பிஉள்ளது.

இந்நிலையில், ஏரியில் ஏராளமான மீன்கள், தண்ணீருடன் அடித்து வரப்பட்டுள்ளன. இந்த மீன்களை பிடிப்பதில் கிராமத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இதற்காக, பைபர் படகு ஒன்றை, ஏரியில் இயக்கி வருகின்றனர். பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை வட்டாரத்தில் இதுவரை எந்த வொரு நீர்நிலையிலும் படகு இயக்கப்பட்டது இல்லை.இதனால், இந்த படகு மீன் பிடிப்பவர்களுக்கு மட்டும் இன்றி, உல்லாச சவாரி செய்ய விரும்புகிறவர்களையும் ஏற்றி செல்கிறது. அவசர காலங்களில் மீட்பதற்கு மீட்பு குழுவினர் யாரும் இல்லை. உல்லாச சவாரி செய்பவர்கள், பாதுகாப்பு கவச உடைகளையும் அணிவது இல்லை. விபரீதம் நிகழலாம் என, சமூக ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X