விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை, கூட்டமைப்பு நிர்வாகிகள் திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்க கூட்டமைப்பு, மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 11.00 மணிக்கு, கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம், விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக இயற்கை சீற்றங்களால் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் நடக்கவில்லை.பாதித்தோர் அரசு வழங்கும் நலத்திட்டங்கள் பெற முடியவில்லை. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பராமரிப்போருக்கு அரசு உதவிதொகை ஆயிரம் ரூபாய் பெறும் முகாம் நடக்கவில்லை. தேசிய அடையாள அட்டை கோரி மாற்றுத்திறனாளிகள் பலர் காத்திருக்கின்றனர். இதையெல்லாம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தெரிவித்தும் உரிய பலனில்லை' என மாற்றுத்திறனாளிகள் முறையிட்டனர். இதற்கு துறை சார்ந்த அலுவலரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததன் பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE