நிவாரண உதவிகள் அமைச்சர் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரண உதவிகள் அமைச்சர் வழங்கல்

Added : நவ 24, 2021
Share
கண்டாச்சிபுரம் : மழையினால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் சமூகத்தினருக்கு அமைச்சர் பொன்முடி நிவாரணம் வழங்கினார்.கண்டாச்சிபுரம் தாலுகா, முகையூர் - பரனுார் சாலையில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். கலெக்டர் மோகன், எம்.எல்.ஏ., புகழேந்தி, ஆர்.டி.ஓ., ஹரிதாஸ் முன்னிலை வகித்தனர். தொடர்

கண்டாச்சிபுரம் : மழையினால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் சமூகத்தினருக்கு அமைச்சர் பொன்முடி நிவாரணம் வழங்கினார்.கண்டாச்சிபுரம் தாலுகா, முகையூர் - பரனுார் சாலையில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். கலெக்டர் மோகன், எம்.எல்.ஏ., புகழேந்தி, ஆர்.டி.ஓ., ஹரிதாஸ் முன்னிலை வகித்தனர். தொடர் மழையில் இப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நரி குறவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அமைச்சர் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கி, இங்கு வசிக்கும் அனைவருக்கும் தமிழக அரசின் மூலம் தொகுப்பு வீடுகளை கட்டித்தரவும் ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்தார். அருளவாடி - கொங்கராயனுார் தரைப்பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தாசில்தார் ஜெயலட்சுமி, முகையூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றியக் குழுத் தலைவர் தனலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X