பொது செய்தி

தமிழ்நாடு

4 நாட்களுக்கு பிறகு மின்சாரம்; ஆறு கிராம மக்கள் மகிழ்ச்சி

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே நான்கு நாட்களுக்கு பிறகு மின்சாரம் வழங்கப்பட்டதால் ஆறு கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பையூர், மாரங்கியூர், கொங்கராயனுார், மேட்டுகாலனி, உள்ளிட்ட 6 கிராமங்களுக்கு அப்பகுதியில் உள்ள கோரையாற்று வழியாக மின்கோரபும் அமைத்து மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.கடந்த 19ம்

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே நான்கு நாட்களுக்கு பிறகு மின்சாரம் வழங்கப்பட்டதால் ஆறு கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பையூர், மாரங்கியூர், கொங்கராயனுார், மேட்டுகாலனி, உள்ளிட்ட 6 கிராமங்களுக்கு அப்பகுதியில் உள்ள கோரையாற்று வழியாக மின்கோரபும் அமைத்து மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.

கடந்த 19ம் தேதி கோரையாற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் மின்கோபுரம் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டு, இக்கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், கிராம மக்கள் அவதியடைந்து வந்தனர். கள்ளக்குறிச்சி மின்துறை மேற்பார்வையாளர் அருட்பெருஞ்ஜோதி தலைமையில், உளுந்துார்பேட்டை செயற்பொறியாளர் சர்தார், உதவி செயற்பொறியாளர் பாக்கிராஜ், உதவி மின்பொறியாளர் பழனி முன்னிலையில், 100க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள பாலத்தின் வழியாக 70 மின்கம்பங்கள் நட்டு தற்காலிகமாக 6 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்தனர். இதனால் அப்பகுதிமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X