பொது செய்தி

தமிழ்நாடு

தக்காளி விலையுடன் போட்டியிடும் கத்தரி

Added : நவ 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை : மதுரையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்கும் நிலையில் கத்தரிக்காய் ரூ.120 வரை அதிகரித்து விலையில் போட்டி போடுகிறது.மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் மார்க்கெட் கூட்டமைப்பு தலைவர் சின்னமாயன் கூறியதாவது: தொடர் மழையால் தக்காளி விளைச்சல் பாதித்து, வரத்து குறைந்ததால் விலை அதிகரித்து வருகிறது. இம்மார்க்கெட்டுக்கு தினமும் 90 டன் வரை தக்காளி வருகிறது. நேற்றைய
 தக்காளி விலையுடன் போட்டியிடும் கத்தரி

மதுரை : மதுரையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்கும் நிலையில் கத்தரிக்காய் ரூ.120 வரை அதிகரித்து விலையில் போட்டி போடுகிறது.

மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் மார்க்கெட் கூட்டமைப்பு தலைவர் சின்னமாயன் கூறியதாவது: தொடர் மழையால் தக்காளி விளைச்சல் பாதித்து, வரத்து குறைந்ததால் விலை அதிகரித்து வருகிறது. இம்மார்க்கெட்டுக்கு தினமும் 90 டன் வரை தக்காளி வருகிறது. நேற்றைய நிலவரப்படி 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.1120க்கு விற்றது. சில்லரைக்கு ரூ.40க்கு விற்பவர்கள் ரூ.100 வரை விற்றனர்.

தக்காளி விலையுடன் போட்டியிடுவதாக ரூ.20க்கு விற்க வேண்டிய ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.120க்கு விற்கிறது. ரூ.20க்கு விற்க வேண்டிய வெண்டை ரூ.80 வரை அதிகரித்துள்ளது. மிதமான வெயில் வந்தால் தான் தக்காளி, கத்தரி உள்ளிட்ட காய்கறிகள் விலை சீராகும். மதுரையில் 2 தக்காளி கொண்ட பாக்கெட் ரூ.18க்கு விற்பதாக பரவிய தகவலும், படமும் உண்மையில்லை என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-நவ-202110:09:05 IST Report Abuse
அப்புசாமி சௌக்கிதாரின் வேளாண் சட்டங்கள் அமல் படுத்தியிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா? தனியார்கள் பஞ்சாபிலிருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கி இங்கே கொஞ்ச லாபத்திலே வித்திருப்பாங்க. பஞ்சாபில் கத்திரிக்கா விளையலேன்னா, ஆத்மநிர்பரா கீழே தாய்லாந்துலேருந்து கொணாந்து எறக்கியிருப்பாங்க. உள்ளூர் விவசாயிங்க இருக்கறதையும் விக்க முடியாம போய் வருமானம் ரெட்டிப்பாயிருக்கும். இதையெல்லாம் வெவரமா விளக்கி சொல்ல முடியாம போயிருச்சு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X