சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடை உரிமையாளரை தாக்கிய இருவர் கைது

Added : நவ 24, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரத்தில் பெட்டிக்கடை உரிமையாளரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம், வி.மருதுார் பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் விஸ்வநாதன்,32; இவர், நரசிங்கபுரம் பகுதியில் பங்க் கடை வைத்துள்ளார். இவரது கடையில் அப்பகுதியை சேர்ந்த திருஞானம் மகன் கணபதி,19; பரமசிவம் மகன் கவுதம்,19; ஆகியோர் கடந்த ஒரு மாதம் முன்பு புகையிலை பொருள் கேட்டுள்ளனர். அவர்

விழுப்புரம் : விழுப்புரத்தில் பெட்டிக்கடை உரிமையாளரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம், வி.மருதுார் பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் விஸ்வநாதன்,32; இவர், நரசிங்கபுரம் பகுதியில் பங்க் கடை வைத்துள்ளார்.

இவரது கடையில் அப்பகுதியை சேர்ந்த திருஞானம் மகன் கணபதி,19; பரமசிவம் மகன் கவுதம்,19; ஆகியோர் கடந்த ஒரு மாதம் முன்பு புகையிலை பொருள் கேட்டுள்ளனர். அவர் கடையில் விற்பதில்லை என கூறியுள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம் மீண்டும் இருவரும் அதே கடையில் புகையிலை கேட்டுள்ளனர். இல்லை எனக்கூறியதால் ஆத்திரமடைந்த இருவரும், விஸ்வநாதனை திட்டி, தாக்கியுள்ளனர். விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, கணபதி, கவுதம் ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X