பொது செய்தி

இந்தியா

மாணவர்களை தண்ணீர் குடிக்க 'வாட்டர் பெல்' திட்டம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
மங்களூரு : குக்கிராமத்தின் அரசு பள்ளியொன்றில், மாணவர்களை தண்ணீர் குடிக்க வைக்கும் நோக்கில் 'வாட்டர் பெல்' திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.தினமும் குறைந்தபட்சம் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டுமென டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால் குழந்தைகளிடையே, தண்ணீர் குடிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.இதை மனதில் கொண்டு கட்டாயமாக

மங்களூரு : குக்கிராமத்தின் அரசு பள்ளியொன்றில், மாணவர்களை தண்ணீர் குடிக்க வைக்கும் நோக்கில் 'வாட்டர் பெல்' திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.தினமும் குறைந்தபட்சம் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டுமென டாக்டர்கள் கூறுகின்றனர்.

ஆனால் குழந்தைகளிடையே, தண்ணீர் குடிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.இதை மனதில் கொண்டு கட்டாயமாக தண்ணீர் குடிக்கும் வசதியை சில தனியார் பள்ளிகள் கொண்டு வந்துள்ளன.தட்சிண கன்னடா கடபாவின், ஆலங்கார் அரசுப்பள்ளியில் 'வாட்டர் பெல்' திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர்.

பள்ளியில் இரண்டு மணிக்கு ஒரு முறை, வாட்டர் பெல் அடிக்கும். அப்போது மாணவ - மாணவியர் அவரவர் பாட்டில்களிலிருந்து, தண்ணீர் அருந்த வேண்டும். இதன் மூலம் மாணவர்களுக்கு தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகின்றனர்.மாநிலத்தின் முந்தைய கல்வி துறை அமைச்சர் சுரேஷ்குமார், அரசுப்பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டத்தை கட்டாயமாக்க வேண்டுமென விரும்பினார்.அரசு பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. ஆனால் ஆலங்கார் பள்ளியில் செயல்படுத்தி, மற்ற பள்ளிகளுக்கு முன் மாதிரியாக உள்ளனர்.பள்ளி தலைமை ஆசிரியர் லிங்கராஜூ கூறியதாவது:குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, தலை சுற்றல் உட்பட பல்வேறு ஆரோக்கிய பிரச்னைகள் ஏற்படுகிறது.

இதற்கு அவர்கள் பள்ளியில் சரியாக தண்ணீர் குடிக்காததே காரணம்.இதை உணர்ந்தே பள்ளியில் 'வாட்டர் பெல்' திட்டத்தை கொண்டு வந்தோம். அந்தந்த வயதுக்கு தக்கபடி, தண்ணீர் குடிக்க வேண்டும். இதன்படி இரண்டு மணிநேரத்துக்கு ஒருமுறை, மாணவர்கள் தண்ணீர் குடிக்கின்றனர்.பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதால் உடல் ஆரோக்கியம் பாதிப்படையும். எனவே ஸ்டீல் பாட்டில்களில் வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டு வரும்படி உத்தரவிட்டோம்.தண்ணீர் 66 நோய்களுக்கு மருந்தாகிறது என்பது நிரூபணமாகியுள்ளது. இத்தகைய மகத்துவம் பெற்ற தண்ணீரை குடிக்கும்படி, குழந்தைகளை ஊக்கப்படுத்துகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X