சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அதிவேகமாக டூவீலர் ஓட்டிய 8ம் வகுப்பு மாணவர்; விரட்டி அபராதம் விதித்த துணை கமிஷனர்

Added : நவ 24, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் அதிவேகமாக டூவீலரை ஓட்டிய 8ம் வகுப்பு மாணவரை பின்தொடர்ந்து சென்று எச்சரித்த போக்குவரத்து துணைகமிஷனர் ஈஸ்வரன், அபராதம் விதித்ததுடன் பெற்றோருக்கும் அபராதம் விதித்தார்.ஆத்திக்குளம் ஆடிட்டர் செல்வராஜ். இவரது 2வது மகன், தனியார் பள்ளியில் 8 ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன் தினம் புது நத்தம் ரோட்டில் துணைகமிஷனர் ஈஸ்வரன் சென்ற போது, அவரது காரை முந்தி
அதிவேகமாக டூவீலர் ஓட்டிய 8ம் வகுப்பு மாணவர்; விரட்டி அபராதம் விதித்த துணை கமிஷனர்

மதுரை : மதுரையில் அதிவேகமாக டூவீலரை ஓட்டிய 8ம் வகுப்பு மாணவரை பின்தொடர்ந்து சென்று எச்சரித்த போக்குவரத்து துணைகமிஷனர் ஈஸ்வரன், அபராதம் விதித்ததுடன் பெற்றோருக்கும் அபராதம் விதித்தார்.

ஆத்திக்குளம் ஆடிட்டர் செல்வராஜ். இவரது 2வது மகன், தனியார் பள்ளியில் 8 ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன் தினம் புது நத்தம் ரோட்டில் துணைகமிஷனர் ஈஸ்வரன் சென்ற போது, அவரது காரை முந்தி சிறுவன் ஒருவர் டூவீலரில் 'பறந்தார்'. தோற்றத்தை கண்டு 'சிறுவன்' என யூகித்த துணைகமிஷனர், பின்தொடர்ந்தார். அவுட்போஸ்ட்டில் சிறுவன், டூவீலரை நிறுத்தி கடைக்கு செல்ல முயன்றார்.

அவரிடம் துணை கமிஷனர் விசாரித்ததில் 8ம் வகுப்பு மாணவர் எனத்தெரிந்தது. அவர் ஓட்டியது சகோதரரின் டூவீலர். 2 ஆண்டுகளாக ஓட்டி வருகிறார். அவருக்கு அபராதம் விதித்ததுடன், பெற்றோரை கண்டித்து ரூ.2700 அபராதம் விதித்தார். '18 வயது நிரம்பிய பின் மகனை டூவீலர் ஓட்ட அனுமதிப்போம். இனி தவறு நடக்காது' என எழுதிக்கொடுத்து மாணவரை அழைத்துச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X