பொது செய்தி

இந்தியா

தங்கவயல் நீதிமன்றத்தில் டிசம்பர் 18 ல் தேசிய லோக்

Added : நவ 24, 2021
Share
Advertisement
தங்கவயல் : 'தங்கவயல் நீதிமன்றத்தில் டிசம்பர் 18 ல் தேசிய லோக் அதாலத் நடக்கிறது. பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும்,'' என கோலார் மாவட்ட முதன்மை நீதிபதி பவனேஷ் தெரிவித்தார்.தங்கவயலில் அவர் கூறியதாவது:தங்கவயல் நீதிமன்றத்தில் பல வழக்குகள், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இத்தகைய வழக்குகளை விரைந்து முடிக்கவே 'அதாலத்' நடத்தப்படும்.

தங்கவயல் : 'தங்கவயல் நீதிமன்றத்தில் டிசம்பர் 18 ல் தேசிய லோக் அதாலத் நடக்கிறது. பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும்,'' என கோலார் மாவட்ட முதன்மை நீதிபதி பவனேஷ் தெரிவித்தார்.தங்கவயலில் அவர் கூறியதாவது:

தங்கவயல் நீதிமன்றத்தில் பல வழக்குகள், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இத்தகைய வழக்குகளை விரைந்து முடிக்கவே 'அதாலத்' நடத்தப்படும். டிசம்பர் 18ல் தேசிய லோக் அதாலத் நடக்கிறது.'செக் பவுன்ஸ்' வழக்குகளில் சம்பந்தப்பட்டோரையும், குறிப்பிட்ட வங்கி அதிகாரிகளையும் அழைத்து சுமூகமாக தீர்வு காணப்படும்.பேசி தீர்வு தீர்க்கப்படாமல் உள்ள தொழிலாளர் பிரச்னைகளில், இரு தரப்பினரையும் அழைத்து பேசி தீர்வு காணப்படும்.

மின் கட்டணம், குடிநீர் கட்டணம், குடும்ப பிரச்னைகளான சொத்து தகராறு, விவாகரத்து, ஜீவனாம்சம் போன்ற வழக்குகளிலும் தீர்வு காணப்படும் வாய்ப்பு உள்ளது. இதற்காக கட்டணம் எதுவும் கிடையாது.மோட்டார் வாகனங்கள், காப்பீடு, விபத்து வழக்குகளை தீர்வு காண்பதற்கும் முன்னுரிமை வழங்கப்படும்.லோக் அதாலத் மூலம் கர்நாடகாவில் நல்ல பயன் கிடைத்து வருகிறது. கடந்த முறை நடந்த அதாலத் மூலம், கோலார் மாவட்டத்தில் 5,000 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. கிரைம் வழக்குகளும் கூட விசாரிக்கப்படும். முதன் முறையாக திருட்டு உட்பட சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டோரை திருத்தும் நோக்கத்தில் தீர்வு காண்பதற்கும் வாய்ப்பு உள்ளது.கொலை குற்றங்கள், 'அதாலத்' மூலம் தீர்வு காண முடியாது. நீதிமன்றத்தில், இரு தரப்பு வாதங்கள் மூலம் மட்டுமே தீர்ப்பளிக்க வாய்ப்பு உண்டு.அதாலத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செல்வது மிக குறைவே. ஆயிரத்தில் ஓரிரு வழக்குகள் செல்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.வழக்குகள் விசாரணைதங்கவயல் முதன்மை நீதிபதி மகேஷ் பட்டேல் கூறுகையில், ''தங்கவயலில் நிலுவையில் 6,000 வழக்குகள் உள்ளன. மூன்று மாதங்களுக்கு முன் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியில், 830 வழக்குகள் விசாரணைக்கு ஏற்கப்பட்டது.''இதில் 649 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. பத்தாண்டுகளாக உள்ள 600 வழக்குகளில் தீர்வு காணப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X