கால்நடைகளுக்குகோமாரி தடுப்பூசி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கால்நடைகளுக்குகோமாரி தடுப்பூசி

Added : நவ 24, 2021
Share
மைசூரு : மைசூரு கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில், கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமில் 5 லட்சம் கால்நடைகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மைசூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம், முதல் சுற்று, நடப்பாண்டில் பிப்., முதல் மார்ச் வரை நடந்தது.இரண்டாவது சுற்று, ஆறு மாத இடைவெளியில் நடத்தப்பட வேண்டும். ஆனால் கொரோனா பாதிப்பால் நவம்பர் முதல் டிசம்பர் வரை

மைசூரு : மைசூரு கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில், கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமில் 5 லட்சம் கால்நடைகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மைசூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம், முதல் சுற்று, நடப்பாண்டில் பிப்., முதல் மார்ச் வரை நடந்தது.இரண்டாவது சுற்று, ஆறு மாத இடைவெளியில் நடத்தப்பட வேண்டும். ஆனால் கொரோனா பாதிப்பால் நவம்பர் முதல் டிசம்பர் வரை நடக்கிறது.மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில், தாலுகா அளவிலான அதிகாரிகளுக்கு முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வீட்டில் வளர்க்கும், பசு, எருமை, ஆடு உள்ளிட்ட அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடுவதற்கு, வீடு தோறும் மருத்துவ குழுவினர் அனுப்பப்படுகின்றனர்.நடப்பாண்டில் 5 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் சதஸ்வரமூர்த்தி கூறியதாவது:இரண்டாவது சுற்றில் நாள் தோறும் 80 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது

.கடந்தாண்டில் மைசூரில், கோமாரி நோயால் 12 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. அவற்றின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.தடுப்பூசி போடுவதால் பக்க விளைவுகள் ஏற்படும் என சில விவசாயிகள் அச்சப்படுகின்றனர். தடுப்பூசி போடாமல் கால்நடைகள் நோயால் பாதிக்கப்பட்டால், அவற்றுக்கு சிகிச்சை அளித்து, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதிலும், கருவுறுதலிலும் பிரச்னை ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X