சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தரமற்ற ரேஷன்  அரிசியை ரோட்டில் கொட்டிய மக்கள்

Added : நவ 24, 2021
Share
Advertisement
மேலுார் : மேலுார் அருகே கிடாரிப்பட்டியில் தரமற்றதாக வழங்கப்பட்ட ரேஷன்அரிசியை ரோட்டில் கொட்டி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.இங்குள்ள ரேஷன் கடையில் 1100 பயனாளிகளுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது. அரிசி பழுப்பு நிறமாகவும், கருப்பு அரிசிகலந்து சாப்பிட முடியாத அளவிற்கு துர்நாற்றத்துடன் தரமற்றதாக இருந்தது. இதுகுறித்து விற்பனையாளர் சரியான தகவல் தெரிவிக்கவில்லை. இதனால்

மேலுார் : மேலுார் அருகே கிடாரிப்பட்டியில் தரமற்றதாக வழங்கப்பட்ட ரேஷன்அரிசியை ரோட்டில் கொட்டி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இங்குள்ள ரேஷன் கடையில் 1100 பயனாளிகளுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது. அரிசி பழுப்பு நிறமாகவும், கருப்பு அரிசிகலந்து சாப்பிட முடியாத அளவிற்கு துர்நாற்றத்துடன் தரமற்றதாக இருந்தது. இதுகுறித்து விற்பனையாளர் சரியான தகவல் தெரிவிக்கவில்லை. இதனால் பொதுமக்கள் அரிசியை ரோட்டில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர்.

தாலுகா வழங்கல் அலுவலர் பிருந்தா தரமற்ற அரிசியை மாற்றி தருவதாக கூறியதையடுத்து மறியலை பொதுமக்கள் கைவிட்டனர். மறியலால் அழகர்கோவில் - மேலுார் மெயின் ரோட்டில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X