மாநில சிலம்பம் போட்டி: மதுரை வீரர்கள் வெற்றி | Dinamalar

மாநில சிலம்பம் போட்டி: மதுரை வீரர்கள் வெற்றி

Added : நவ 24, 2021
Share
மதுரை : வீரக்கலை தென்னிந்திய சிலம்ப கலைக்கூடம் சார்பில் சென்னையில் நடந்த மாநில சிலம்பாட்ட போட்டிகளில் மதுரை வீரர்கள் வெற்றி பெற்றனர்.தனித்திறமை மற்றும் தொடுமுறை பிரிவுகளின் கீழ் எடை வாரியாக நடந்த போட்டிகளில் 600 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மதுரையில் இருந்து 14 வீரர்கள் பயிற்சியாளர் கவுரி சங்கர் தலைமையில் பங்கேற்றனர். எட்டு வயது பிரிவில் கதிரேசன் 2ம் இடம், 9 வயது

மதுரை : வீரக்கலை தென்னிந்திய சிலம்ப கலைக்கூடம் சார்பில் சென்னையில் நடந்த மாநில சிலம்பாட்ட போட்டிகளில் மதுரை வீரர்கள் வெற்றி பெற்றனர்.

தனித்திறமை மற்றும் தொடுமுறை பிரிவுகளின் கீழ் எடை வாரியாக நடந்த போட்டிகளில் 600 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மதுரையில் இருந்து 14 வீரர்கள் பயிற்சியாளர் கவுரி சங்கர் தலைமையில் பங்கேற்றனர். எட்டு வயது பிரிவில் கதிரேசன் 2ம் இடம், 9 வயது பிரிவில் விஷ்ணுவர்தன் 3ம் இடம், 10 வயது பிரிவில் நிவேகன் 1ம் இடம், நிலவமுதன் 3ம் இடம், 11 வயது பிரிவில் பாலஆதித்யா முதலிடம், தேவா 3ம் இடம், 12 வயது பிரிவில் ஆகாஷ் 2ம் இடம், விஸ்னேஸ்வரன் 3ம் இடம், 13 வயது பிரிவில் வீரசுலோக் முதலிடம், விஷ்வக் 3ம் இடம், 15 வயது பிரிவில் விஜய் 3ம் இடம் பெற்றனர்.

பெண்கள் 8 வயது பிரிவில் வான்எழில் 2ம் இடம், 11 வயது பிரிவில் சாதனா 2ம் இடம், 12 வயது பிரிவில் பூஜா 3ம் இடம் பெற்றனர்.வெற்றி பெற்றவர்களை கலைக்கூட மாநில பொது செயலாளர் பெருமாள், பொருளாளர் சிவராம், மாவட்ட செயலாளர்கள் கோகுல், பிரேம் ஆனந்த், பிரசாந்த், சங்கவி பாராட்டினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X