பணியிட மாறுதல் சட்டம்; வாபஸ் பெற கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பணியிட மாறுதல் சட்டம்; வாபஸ் பெற கோரிக்கை

Added : நவ 24, 2021
Share
திருப்பரங்குன்றம் : பணியிட மாறுதல் சட்ட திருத்தத்தை அரசு வாபஸ் பெற வேண்டும்,' என, திருப்பரங்குன்றத்தில் நடந்த தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர்கள் சங்க கூட்டத்தில் மாநில தலைவர் ஷாஜிராவ் வலியுறுத்தினார்.மாநில செயலாளர் சுதர்சன், பொருளாளர் பாலமுருகன், துணை தலைவர் புகழேந்தி முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் கோபி வரவேற்றார். மாநில தலைவர் பேசியதாவது: கோயில்

திருப்பரங்குன்றம் : பணியிட மாறுதல் சட்ட திருத்தத்தை அரசு வாபஸ் பெற வேண்டும்,' என, திருப்பரங்குன்றத்தில் நடந்த தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர்கள் சங்க கூட்டத்தில் மாநில தலைவர் ஷாஜிராவ் வலியுறுத்தினார்.

மாநில செயலாளர் சுதர்சன், பொருளாளர் பாலமுருகன், துணை தலைவர் புகழேந்தி முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் கோபி வரவேற்றார். மாநில தலைவர் பேசியதாவது: கோயில் பணியாளர்களின் பணிவிதியிலுள்ள குறைபாடுகளை களையவும், பணிக்கொடையிலுள்ள முரண்பாடான கருத்துக்களை நீக்கவும் அரசு முன்வர வேண்டும். இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட சிறப்புசம்பளம் உள்ளிட்ட பணப்பயன்களை அரசு வழங்க வேண்டும்.பணியாளர்களை தற்போது பணியிடமாறுதல் வழங்க சட்டம் திருத்தம் ஏற்படுத்தப்பட்டதை எதிர்க்கிறோம். இச்சட்டத்தை அரசு வாபஸ் பெற்று அந்தந்த கோயில்களில் பணிபுரிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X