பொது செய்தி

தமிழ்நாடு

15 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய பசுங்காயமங்கலம் ஏரி

Added : நவ 24, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பசுங்காயமங்கலம் ஏரி கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிரம்பியுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.வடகிழக்கு பருவ மழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பின. பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்திற்குட்பட்ட 314 ஏரிகள் முழுமையாக நிரம்பி வழிந்தோடுகிறது.ஆனால் வரத்து வாய்க்கால் அடைப்பு காரணமாக

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பசுங்காயமங்கலம் ஏரி கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிரம்பியுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.வடகிழக்கு பருவ மழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பின. பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்திற்குட்பட்ட 314 ஏரிகள் முழுமையாக நிரம்பி வழிந்தோடுகிறது.

ஆனால் வரத்து வாய்க்கால் அடைப்பு காரணமாக பசுங்காயமங்கலம் ஏரி மட்டும் நீர் வரத்து இன்றி, வறண்டு காணப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து கோமுகி அணையிலிருந்து வரத்து நீர் முழுமையாக திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், தற்போது நகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பசுங்காயமங்கலம் ஏரி நீர் நிரம்பியுள்ளது.கடந்த 15 ஆண்டுகளாக நிரம்பாமல் கிடந்த ஏரி தற்போது நிரம்பியுள்ளது.

இதன் காரணமாக கள்ளக்குறிச்சி வ.உ.சி., நகர், ராஜாஜி, நகர், எம்.ஜி.ஆர்., நகர், அம்மன் நகர் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்பதாலும், ஏரி மூலம் நீர்ப்பாசனம் பெறும் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X