சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடன் தொல்லையால் இளைஞர் தற்கொலை

Added : நவ 24, 2021
Share
Advertisement
ரிஷிவந்தியம் : பெரியக்கொள்ளியூரில் கடன் தொல்லையால் மனமுடைந்த இளைஞர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.ரிஷிவந்தியம் அடுத்த பெரியக்கொள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் மகன் ஆனந்த்,23; பி.பி.ஏ., பட்டதாரி. இவர் கோயம்புத்துாரில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் வேலையை விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.வேறுவேலை கிடைக்காமல்

ரிஷிவந்தியம் : பெரியக்கொள்ளியூரில் கடன் தொல்லையால் மனமுடைந்த இளைஞர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரிஷிவந்தியம் அடுத்த பெரியக்கொள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் மகன் ஆனந்த்,23; பி.பி.ஏ., பட்டதாரி. இவர் கோயம்புத்துாரில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் வேலையை விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.வேறுவேலை கிடைக்காமல் வீட்டிலேயே இருந்ததால், வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடன் தொல்லை அதிகமானதால் மனமுடைந்த ஆனந்த், அதே பகுதியில் விளைநிலத்தில் உள்ள வேப்பமரத்தில் நேற்று மதியம் 12.45 மணியளவில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்த பகண்டைகூட்ரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆனந்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X