சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமண வரவேற்பில் நகை திருடியவர் கைது

Added : நவ 24, 2021
Share
Advertisement
வானூர் : ஆரோவில் அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய்பணம் மற்றும் நகைகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, ரூ. 1.31 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.புதுச்சேரி மாநிலம், சேதராப்பட்டை சேர்ந்தவர் நாகமுத்து மகன் செல்வக்குமார், 39. இவரது தம்பி மணிமாறன், 27. இவருக்கு கடந்த வாரம் தி.கூட்ரோட்டில் உள்ள டி.பி.ஆர்., திருமண நிலையத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி

வானூர் : ஆரோவில் அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய்பணம் மற்றும் நகைகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, ரூ. 1.31 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.புதுச்சேரி மாநிலம், சேதராப்பட்டை சேர்ந்தவர் நாகமுத்து மகன் செல்வக்குமார், 39. இவரது தம்பி மணிமாறன், 27. இவருக்கு கடந்த வாரம் தி.கூட்ரோட்டில் உள்ள டி.பி.ஆர்., திருமண நிலையத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது

. அப்போது, மணிமாறனுக்கு வந்த மொய் பணம் மற்றும் நகைகள் திருட்டு போனது. ஆரோவில் போலீசார் சி.சி.டி.வி., கேமரா பதிவு காட்சிகளை வைத்து விசாரித்தனர்.நேற்று அதிகாலை தி.கூட்ரோடு சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது, அவ்வழியாக வந்த நபரை மடக்கி விசாரித்தனர்.அவர், கிளியனுார் அடுத்த நல்லாவூரைச்சேர்ந்த பரசுராமன் மகன் ஜெயச்சந்திரன், 30; என்பது தெரியவந்தது. அவர், தி.கூட்ரோட்டில் லாரி புக்கிங் சென்டர் நடத்தி வருகிறார். கடந்த வாரம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணம், நகைகளை திருடியதும், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், முதல் முறையாக திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து, ரூ. 1.31 லட்சம் மற்றும் மூன்று சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X