செயல்பாட்டிற்கு வருமா ஆரம்ப சுகாதார நிலையம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செயல்பாட்டிற்கு வருமா ஆரம்ப சுகாதார நிலையம்

Added : நவ 24, 2021
Share
பேரையூர் : பேரையூர் அருகே பி.சுப்புலாபுரத்தில் திறக்கப்பட்டு ஓராண்டிற்கு மேலாகியும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் செயல்படாததாக கிராமத்தினர் அதிருப்தி தெரிவித்தனர்.2019 ல் ரூ.14 லட்சத்தில் இந்த சுகாதார நிலையம் கட்டப்பட்டது. 14.8.2020 அப்போதைய அமைச்சர் உதயகுமார் திறந்து வைத்தார். இன்று வரை கிராமத்தினர் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பயன்பாட்டுக்கு

பேரையூர் : பேரையூர் அருகே பி.சுப்புலாபுரத்தில் திறக்கப்பட்டு ஓராண்டிற்கு மேலாகியும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் செயல்படாததாக கிராமத்தினர் அதிருப்தி தெரிவித்தனர்.

2019 ல் ரூ.14 லட்சத்தில் இந்த சுகாதார நிலையம் கட்டப்பட்டது. 14.8.2020 அப்போதைய அமைச்சர் உதயகுமார் திறந்து வைத்தார். இன்று வரை கிராமத்தினர் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பயன்பாட்டுக்கு வரவில்லை.ஊராட்சி துணை தலைவர் தலைவர் சொக்கர்ராஜ் கூறியதாவது:

பழைய கட்டடத்தை இடித்து விட்டு புது நிலையம் கட்டப்பட்டு திறக்கப்படாததால் 5 கி.மீ., துாரமுள்ள பேரையூர் மற்றும் டி.கல்லுப்பட்டிக்கு செல்ல வேண்டியுள்ளது. போதிய பஸ் வசதியும் இல்லாததால் கர்ப்பிணிகள், நோயாளிகள் சிரமப்படுகின்றனர். அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த பலனில்லை என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X