பொது செய்தி

இந்தியா

'டாடி ஆறுமுகம்' மகன் போதையில் ரகளை; கைது நடவடிக்கையில் போலீஸ் மெத்தனம்; புதுச்சேரியில் ஓட்டல் மேலாளர், சித்தப்பா மகன் கைது

Added : நவ 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் மதுபான பாரில் போதையில் ஊழியரை தாக்கி சூறையாடிய, 'யூ-டியூப் சேனல்' டாடி ஆறுமுகம் மகன் உள்ளிட்ட மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.'வில்லேஜ் புட் பேக்டரி' என்ற பிரபல யூ டியூப் சேனல் நடத்தி வருபவர் டாடி ஆறுமுகம். தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச்சேர்ந்த இவர், புதுச்சேரி காமராஜ் சாலை 45 அடி சாலை சந்திப்பு, இந்திரா சிக்னல் பகுதியில், 'டாடி


புதுச்சேரி : புதுச்சேரியில் மதுபான பாரில் போதையில் ஊழியரை தாக்கி சூறையாடிய, 'யூ-டியூப் சேனல்' டாடி ஆறுமுகம் மகன் உள்ளிட்ட மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

'வில்லேஜ் புட் பேக்டரி' என்ற பிரபல யூ டியூப் சேனல் நடத்தி வருபவர் டாடி ஆறுமுகம். தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச்சேர்ந்த இவர், புதுச்சேரி காமராஜ் சாலை 45 அடி சாலை சந்திப்பு, இந்திரா சிக்னல் பகுதியில், 'டாடி ஆறுமுகம் பிரியாணி' என்ற உணவகம் நடத்தி வருகிறார்.புதுச்சேரியில் இயங்கி வரும் உணவகத்தை, டாடி ஆறுமுகம் மகன் கோபிநாத்,33, கவனித்து வருகிறார்

. இவரது சித்தப்பா மகன், பொள்ளாச்சி, சுலீஸ்வரன் பேட்டை, என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த ஜெயராம், 25 . அதே ஓட்டலில் வேலை செய்கிறார்.தேனி மாவட்டம், கம்பம், உத்தமபாளையம், சுருளிப்பேட்டை, வடக்கு தெரு, முதல் வார்டை சேர்ந்தவர் ராஜசுப்ரமணிய பாண்டியன் (எ) தாமு,32., இந்த ஓட்டலில் மேலாளராக பணிபுரிகிறார்.உத்தமபாளையத்தைச்சேர்ந்த மோகன், 28; ராஜேஷ், 25; ஆகியோர் இதே ஓட்டலில் சமையல் கூடத்தில் வேலை செய்கின்றனர்.

கோபிநாத் உள்ளிட்ட ஐந்து பேரும், கடந்த 21ம் தேதி இரவு, முத்தியால்பேட்டை காந்தி வீதி, பாரதிதாசன் கல்லுாரி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஏ.கே. டார்வின் ஓட்டலுக்கு சென்றனர்.அங்கு மதுபான பாரில் (பப்) அளவுக்கு அதிகமாக மது குடித்து, குத்தாட்டம் போட்டுள்ளனர். அப்போது, 'பப்' ஊழியர்களை காரணமின்றி அழைத்து, மரியாதை இல்லாமல் பேசிக் கொண்டிருந்தனர்

.இரவு 11:00 மணிக்கு 'பப்' மூடும் நேரமானதால், வாடிக்கையாளர்கள் வெளியே அனுப்பப்பட்டனர்.போதையில் இருந்த கோபிநாத், தாமு, உள்ளிட்ட 5 பேர், தங்களுக்கு மது பானம் வேண்டும் என ஊழியர்களிடம் கேட்டுள்ளனர்.ஊழியர் ஜார்ஜஸ் சினாஸ், 32; 'இரவு 11:00 மணிக்கு மேல் மதுபானம் விற்க அனுமதி கிடையாது. நேரம் ஆகிவிட்டது. தயவு செய்து இத்துடன் முடித்து கொண்டு கிளம்புங்கள்' என கூறினார்.அதற்கு, கோபிநாத், ஆபாசமான வார்த்தையால் திட்டி, 'நான் யாரு தெரியுமா, டாடி ஆறுமுகம் மகன். இவர்கள் என் நண்பர்கள். எங்களுக்கு சரக்கு தரமாட்டேன் என கூறுகிறாயா' என கேட்டுக் கொண்டே, பீர் பாட்டிலை உடைத்து தாக்கினார்

.அதை தடுத்த ஜார்ஜஸ்சினாஸ்க்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. கோபிநாத்துடன் இருந்த மற்ற நால்வரும், பீர் பாட்டிலால் சரமாரியாக ஜார்ஜஸ் சினாசை தாக்கினர்.இதில் நிலை தடுமாறி விழுந்ததில், அவரது வலது கால் முட்டியில் அடிபட்டது. கோபிநாத், டேபிளை ஓங்கி அடித்ததில், கண்ணாடி உடைந்தது.அதையடுத்து, ஜார்ஜஸ்சினாஸ் உடனடியாக முத்தியால்பேட்டை போலீசுக்கு போன் செய்யுமாறு சக ஊழியரிடம் கூறினார்.

'போலீசில் புகார் கூறினால், குத்தி கொலை செய்து விடுவோம்' என மிரட்டல் விடுத்துவிட்டு, அங்கிருந்து வெளியே கிளம்பினர்.காயமடைந்த ஜார்ஜஸ் சினாஸ், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் கோபிநாத், தாமு, ஜெயராம், மோகன், ராஜேஷ் ஆகிய 5 பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.இவர்கள் மீது, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 294 (பி), ஆபாசமாக திட்டுதல், பொருளால் தாக்கி காயம் ஏற்படுத்துதல் (324), பொருட்களை உடைத்து சேதம் ஏற்படுத்துதல் (427), கொலை மிரட்டல் (506(2), கூட்டாக சேர்ந்து குற்றச் செயலில் ஈடுபடுதல் (34) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.இதில், ஓட்டல் மேலாளர் தாமு, ஜெயராம் ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்து, புதுச்சேரி முதலாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் நீதிபதி பிரீத்தி முன்பு ஆஜர்படுத்தினர். இருவரையும், டிச. 6ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து இருவரும் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இச்சம்பவத்தின் முதல் குற்றவாளியான கோபிநாத், மற்றும் மோகன், ராஜேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.போலீசுக்கு அர்ச்சனை மது போதையில் 'பப்'பில் இருந்து வெளியே வந்த கோபிநாத் உள்ளிட்ட ஐந்து பேரும் சாலையில் நிற்க முடியாத அளவிற்கு தள்ளாடிக் கொண்டிருந்தனர். சம்பவம் தெரிந்து அங்கு வந்த முத்தியால்பேட்டை போலீஸ் ஏட்டு மோகன், 'என்ன பிரச்னை' என கேட்டுள்ளார்.அவரிடம், 'ஓசியில் பிரியாணி வாங்கி தின்னும் ஆட்கள், நீங்கள் என்னை எப்படி கேள்வி கேட்கலாம்' என கூறியதோடு, அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்து, தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.போலீஸ் மெத்தனம்?கடை சூறை, அடிதடி, கொலை மிரட்டலில் சாதாரண நபர் ஈடுபட்டால், போலீசாரின் கைது நடவடிக்கை தீவிரமாக இருக்கும். தலைமறைவாக இருந்தால், சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தில் ஒருவரை போலீஸ் நிலையத்திற்கு துாக்கி வந்துவிடுவர். அவர் மூலம், குற்றவாளியை தானாக போலீஸ் நிலையத்திற்கு வரவழைப்பர்.இச்சம்பவத்தில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள டாடி ஆறுமுகம் மகன் கோபிநாத், மோகன், ராஜேஷ் ஆகியோர் தலைமறைவாகிவிட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

அவர்களை எப்படி வரவழைக்க வேண்டும் என்ற 'டெக்னிக்' போலீசுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், இதுவரை போலீசார் அந்த டெக்னிக்கை பயன்படுத்தாதது பொதுமக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுகிறது.அடுத்தது புரோட்டா? அரசு அனுமதித்த நேரத்திற்கு பின் மது கேட்டதால், இரவு 11:00 மணிக்கு மேல் மதுபானம் விற்க அனுமதி கிடையாது என்று பார் ஊழியர் கூறியுள்ளார்.ஆனால், பிரியாணி ஓட்டல் நடத்தி வரும் நபர்கள் 'நான் யாரு தெரியுமா, என்று கேட்டு, ரத்தம் வரும் அளவிற்கு ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்.

அதாவது, கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளது.ஆனால் போலீசார் கைது நடவடிக்கையில் தீவிரம் காட்டவில்லை. இது இப்படியே போனால் அடுத்து, புரோட்டா கடை, இட்லி கடை என்று புறப்பட்டுவிடுவர். இவ்விஷயத்தில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டால் தான் அடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X