போலீஸ் செய்திகள்,,

Added : நவ 24, 2021
Share
Advertisement
அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் முத்துகிருஷ்ணன் 38. அரசு பஸ் டிரைவரான இவர், நேற்று முன்தினம் மாலை ஆரப்பாளையத்தில் இருந்து திருப்பூருக்கு பஸ்சை எடுத்துச்சென்றார். காளவாசல் சிக்னல் அருகே பஸ்சை முந்திச்செல்ல கார் ஒன்று முயன்றது. இதுதொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் காரில் வந்த சிவகங்கை மாவட்டம் சுரேஷ் 36, டிரைவரை தாக்கியதோடு

அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் முத்துகிருஷ்ணன் 38. அரசு பஸ் டிரைவரான இவர், நேற்று முன்தினம் மாலை ஆரப்பாளையத்தில் இருந்து திருப்பூருக்கு பஸ்சை எடுத்துச்சென்றார். காளவாசல் சிக்னல் அருகே பஸ்சை முந்திச்செல்ல கார் ஒன்று முயன்றது. இதுதொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் காரில் வந்த சிவகங்கை மாவட்டம் சுரேஷ் 36, டிரைவரை தாக்கியதோடு இரும்பு கம்பியால் பஸ் கண்ணாடியை சேதப்படுத்தினார். அவரை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்தனர்.

பா.ஜ., தலைவர் மீது வழக்கு

மதுரை: பெட்ரோல் டீசல் விலையை குறைக்ககோரி நேற்றுமுன்தினம் மாநகராட்சி அலுவலகம் அருகே பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தடையை மீறி நோய் பரப்பும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக நகர் தலைவர் டாக்டர் சரவணன் உட்பட 500 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்கப்பதிவு செய்தனர்.

இருவர் கைது

மேலுார்: திருவாதவூர், நாவினிப்பட்டி பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றபோது தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்ற முகமது கனி 50, அப்துல் அஜீஸ் 55, ஆகியோரை கைது செய்து 53 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மாணவர் தற்கொலை

திருமங்கலம்: பாரப்பத்தி சக்திவேல் மகன் கார்த்திகை செல்வன் 20. தனியார் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சில நாட்களாக உடல்நிலை பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கூடக்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

சிறுமிக்கு திருமணம்: பெற்றோர் மீது வழக்கு

திருமங்கலம்: ஆஸ்டின்பட்டி பகுதி 16 வயது சிறுமிக்கு நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. திருப்பரங்குன்றம் ஊர் நல அலுவலர் யோகம்பால் புகாரில் சிறுமியின் பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலுாரில் தொடர் திருட்டு

மேலுார்: சந்தைப்பேட்டை நகராட்சி வணிக வளாகத்தில் அலைபேசி, பழைய இரும்பு, டூவீலர் பழுது நீக்கும் கடை, போட்டோ ஸ்டுடியோவில் நேற்றுமுன்தினம் இரவு அடுத்தடுத்து பூட்டு உடைக்கப்பட்டது. இதில் ஜஹாங்கீர் அலைபேசி கடையிலிருந்து ஒரு அலைபேசி திருடு போனது. நவ.,19ல் மதுரை மெயின் ரோட்டில் தனியார் காப்பீடு கம்பெனி உள்ளிட்ட 4 இடங்களில் கொள்ளை முயற்சி நடந்தது. எஸ்.பி., பாஸ்கரன் கூடுதல் போலீசாரை நியமித்து ரோந்து வர ஏற்பாடு செய்ய வேண்டும்.

காவலாளி உடையில் திருடி வந்தவர் கைது

மேலுார்: காஞ்சிவனம் கோயில் பகுதியில் எஸ்.ஐ.,க்கள் சுதன், ஜெயக்குமார் ரோந்து சென்ற போது கிருஷ்ணகிரி கோவிந்தராஜை 40, சந்தேகத்தின்பேரில் விசாரித்தபோது மேலுார், நாகமலை புதுக்கோட்டை பகுதி கடைகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. தன் மீது சந்தேகம் ஏற்படாமல் இருக்க காவலாளி உடையில் திருடி வந்துள்ளார். அவரை கைது செய்தனர்.

மனைவியை கொலை செய்தவருக்கு வெட்டு

சோழவந்தான் : அவனியாபுரம் பெரியார் நகர் ஜோதிமணி 23. இவர் காதல் மனைவி சோழவந்தான் ராயபுரம் கிளாடிஸ்ராணி 5 மாத கர்ப்பிணியை ஆக., 5 அவனியாபுரத்தில் எரித்து கொன்ற வழக்கில் கைதானார். நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தவர் சோழவந்தான் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு திரும்பினார். நாகமலை புதுக்கோட்டை அருகே ஜோதிமணியை அரிவாளால் வெட்டியவர்கள் போலீசாரை கண்டதும் தப்பினர். காயத்துடன் ஜோதிமணி உயிர் தப்பினார்.

ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

அலங்காநல்லுார் : மதுரை டி.ஐ.ஜி., காமினி தனிப்படை எஸ்.ஐ.,நாகநாதன் தலைமையில் போலீசார் அலங்காநல்லுார், பெரிய ஊர்சேரி கண்மாய் பகுதியில் ரோந்து சென்றபோது, கஞ்சா விற்ற செல்வம் 52, தப்பினார். அவர் விட்டு சென்ற ஒரு கிலோ கஞ்சா,ரூ.1630, டூவீலரை பறிமுதல் செய்தனர். செல்வத்தை தேடுகின்றனர். கஞ்சா வழக்கில் சிறையில் உள்ள அவரது மகன் குபேந்திரன் 28, குண்டாஸில் கைது செய்யப்பட்டார்.

சோலார் பேனல் திருட்டு

பேரையூர் : மதுரை வில்லாபுரம் இளங்கோவன் 49. இவர் பேரையூர் அருகே ஏ.கிருஷ்ணாபுரத்தில் சோலார் பேனல் அமைத்து விவசாயம் செய்து வந்தார். தோட்டத்தில் உள்ள சோலார் பேனல்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X