சிறப்பு டி.ஜி.பி., வழக்கு பெண் டி.ஐ.ஜி., சாட்சியம்| Dinamalar

சிறப்பு டி.ஜி.பி., வழக்கு பெண் டி.ஐ.ஜி., சாட்சியம்

Added : நவ 24, 2021
Share
விழுப்புரம் : பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி தொடர்ந்த பாலியல் வழக்கில், விழுப்புரம் நீதிமன்றத்தில் பெண் டி.ஐ.ஜி., சாட்சியம் அளித்தார். வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி புகார் அளித்தார். இதையடுத்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட டி.ஜி.பி., மீதும், பெண் அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த,

விழுப்புரம் : பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி தொடர்ந்த பாலியல் வழக்கில், விழுப்புரம் நீதிமன்றத்தில் பெண் டி.ஐ.ஜி., சாட்சியம் அளித்தார். வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி புகார் அளித்தார். இதையடுத்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட டி.ஜி.பி., மீதும், பெண் அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த, செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., மீதும், விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிந்தனர்.இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சாட்சிகள் விசாரணை கடந்த 11ம் தேதி முதல் துவங்கியது. முதல் சாட்சியான புகார்தாரர் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி சாட்சியம் அளித்துள்ளார். இந்நிலையில், மற்ற சாட்சிகளின் விசாரணை நடக்கிறது.நேற்று நடந்த வழக்கு விசாரணையில், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி., ஆஜரானார். சிறப்பு டி.ஜி.பி., ஆஜராகவில்லை. அதற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிமன்றம் ஏற்று கொண்டது

.இதையடுத்து சாட்சிகள் விசாரணை நடைபெற்றது. இவ்வழக்கில், திருச்சியில் டி.ஐ.ஜி.,யாக பணியாற்றிய ஆனிவிஜயா 3வது சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர், தற்போது சென்னை காவல்துறை தலைமையிடம் (நிர்வாக பிரிவு) டி.ஐ.ஜி.,யாக பணியாற்றுகிறார். அவர் விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் சாட்சியம் அளித்தார். இது காலை 11.45 மணி வரை தொடர்ந்தது. டி.ஐ.ஜி., ஆனிவிஜயா அளித்த சாட்சியங்களை, நீதிபதி கோபிநாதன் பதிவு செய்து கொண்டார்.இதையடுத்து, அவரிடம் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி., தரப்பு வழக்கறிஞர் வெங்கடேசன் குறுக்கு விசாரணை செய்தார். அந்த விசாரைண முடிவடைந்த பின், சிறப்பு டி.ஜி.பி., தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரன், குறுக்கிட்டு டி.ஐ.ஜி., ஆனிவிஜயாவிடம், நாங்கள் குறுக்கு விசாரணை செய்ய கால அவகாசம் வழங்கும்படி கேட்டார்.அதற்கு, தற்போது வேண்டுமானால் குறுக்கு விசாரணை செய்யலாம். கால அவகாசம் வழங்க முடியாது என நீதிபதி கோபிநாதன் தெரிவித்தார்.இதையடுத்து, இவ்வழக்கில் 4, 5 சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள போலீஸ்காரர்கள் சந்திரசேகர், பாலமுருகன் ஆகியோரிடம் விசாரணை நடத்துவதற்காக, வழக்கு விசாரணையை நாளை (25ம் தேதிக்கு) ஒத்திவைத்தார். அதோடு, அன்று இருவரும் ஆஜராக வேண்டும் என்பதால், அவர்களுக்கு சம்மன் அனுப்பும்படி, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு, நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X