தமிழ்நாடு

கடலுார் மாவட்டத்தில் வெள்ள சேதம்:

Added : நவ 24, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் நேற்று பார்வையிட்டனர்.தமிழகத்தில் வெள்ள சேதங்களைப் பார்வையிட மத்திய குழு நேற்று முன்தினம் வந்தது. அக்குழுவின் ஒரு பிரிவு புதுச்சேரி, கடலுார் - மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டனர். உள்துறை அமைச்சக இணை செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையில், வேளாண்மை,
 கடலுார் மாவட்டத்தில் வெள்ள சேதம்:

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் நேற்று பார்வையிட்டனர்.தமிழகத்தில் வெள்ள சேதங்களைப் பார்வையிட மத்திய குழு நேற்று முன்தினம் வந்தது.

அக்குழுவின் ஒரு பிரிவு புதுச்சேரி, கடலுார் - மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டனர். உள்துறை அமைச்சக இணை செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையில், வேளாண்மை, கூட்டுறவு, விவசாயிகள் நலத் துறை இயக்குனர் (தகவல் தொழில் நுட்பம்) விஜய் ராஜ்மோகன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக மண்டல அலுவலர் ராணஞ்சாய் சிங், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சக சார்பு செயலாளர் எம்.வி.என்.வரபிரசாத் பார்வையிட்டனர்.

இந்த குழுவினருடன் மாநில வருவாய் நிர்வாக ஆணையர் கே.பனீந்திர ரெட்டி வந்தார்.இக்குழுவினர் நேற்று காலை 10.30 மணிக்கு கடலுார் வந்தனர். கடலுாரை ஒட்டிய பெரிய கங்கணாங்குப்பம் உச்சிமேடு பாதையில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சி மற்றும் மழையால் இடிந்த ஒரு வீட்டையும் பார்வையிட்டனர். இவற்றை கலெக்டர் பாலசுப்ரமணியம் விளக்கினார்.

பூவாலைபுதுச்சத்திரம் அடுத்த பூவாலை கிராமத்தில், பரவனாற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் 2,000 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளதை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். தண்ணீரில் மூழ்கி அழுகிய நெற்பயிர்களை, மத்திய குழுவினரிடம் விவசாயிகள் காண்பித்தனர். பாதிப்பு ஏற்படுத்திய பரவனாற்றை குழு பார்வையிட்ட போது, கீழ் பரவனாறு துார் வாராததால், பல ஆண்டுகளாக பாதிக்கிறது.

கீழ் பரவனாற்றை துார்வார வேண்டுமென விவசாயிகள் கேட்டனர்.மாவட்டத்தில் கன மழையால் பாதித்த விவசாய பயிர்கள், சாலை, கால்நடைகள் பாதிப்பு குறித்த புகைப்பட காட்சிகளை, பார்வையிட்டனர். பூவாலை ஆய்வுக்கு பின், மத்திய குழுவினர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X