சிரியா போல மாறும் கேரளா; பா.ஜ., குற்றச்சாட்டு

Added : நவ 24, 2021 | கருத்துகள் (44) | |
Advertisement
புதுடில்லி : அன்றாடம் கொலைகள் நிகழும் சிரியா போல கேரளா மாறி வருவதாக பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது.கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீபத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் சஞ்சித் கொலை வழக்கில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் துணை அமைப்பான இந்திய சமூக ஜனநாயக முன்னணியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இது
Kerala, BJP, murder

புதுடில்லி : அன்றாடம் கொலைகள் நிகழும் சிரியா போல கேரளா மாறி வருவதாக பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீபத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் சஞ்சித் கொலை வழக்கில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் துணை அமைப்பான இந்திய சமூக ஜனநாயக முன்னணியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து கேரள பா.ஜ., தலைவர் கே. சுரேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிரியா போல கேரளாவும் கொலைகளமாக மாறி வருகிறது. பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., ஆதரவாளர்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ.,கட்சிக்கும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கும் ரகசிய உறவு உள்ளது.


latest tamil newsமாநிலத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியும் ஆதரவளிக்கின்றன. மக்களுக்கு கேரள போலீசார் மீது இருந்த நம்பிக்கை போய் விட்டது. கேரளாவின் நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விளக்கியுள்ளோம்.

கேரள உணவகங்களில் 'ஹலால்' என்ற விளம்பர பலகைகள் வைக்கப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம். இது, உணவு என்ற பெயரில் மக்களை பிரிக்க, சில மதவெறி குழுக்கள் இணைந்து செய்து வரும் சதிச் செயலாகும். உடனடியாக ஹலால் விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
25-நவ-202101:09:52 IST Report Abuse
மலரின் மகள் ஹலால் உணவு என்று சிலர் சரியான புரிதல் இல்லாமல் எழுதுகிறார்கள். மேலும் எனது இஸ்லாமிய நட்பு வட்டாரத்தில் ஹலால் என்பதை பேசினால் எதோ அவர்கள் எரிச்சல் ஊட்டுவதற்காக சொல்லப்படுவதாக கூட ஒரு சில தீவிர பற்றாளர்கள் உணர்வது உண்டு. அதை நாம் கருத்துப்பகுதியிலும் பார்க்கலாம். ஹலால் என்பது எந்த ஒரு உணவு வகையும் அல்ல. அதுஒரு கட்டிங் ப்ராசஸ். வலியில்லாமல் உணவிற்காக அதற்காகவே படைக்கப்பட்ட அறுத்து கொள்வது. கழுத்து பகுதிகளை தடவி கொடுத்து ஜூகுலர் நாளத்தை அறுத்துவிடுவார்கள். இறைவனை துதி செய்து கொண்டு. அறுபடும் விலங்கிற்கு வலி என்பது மிக சிறிதாகத்தான் இருக்கும். பலர் சொல்வது இந்த மாதிரி செய்வதால் அசுத்தங்கள் நீக்கப்பட்டு சுத்தமான உணவு கிடைக்கும் என்பது பலர் சொல்வது.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
25-நவ-202101:03:37 IST Report Abuse
மலரின் மகள் கோவையின் உக்கடம் பகுதிகளில் மிக பெரியளவில் இவர்கள் சில வருடங்களுக்கு முன்பு சுவர் விளம்பரம் செய்தார்கள். எதோ ஒரு ஆதரவு கரம் நல்கும் ஒரு நல்ல சமுதாய இயக்கமாக தான் விளம்பரம் செய்தார்கள். அனைவரையும் சேரும்படி கூட அழைப்பு விடுத்தார்கள். மொபைல் எண்களும் அப்போது அங்கே தரப்பட்டதாம் சேர்வதற்கு. முதலில் அது எதோ ஒரு சிறந்த அமைப்பாக தென்பட்டது, காரணம் கோவையில் நிறைய சிறப்பான நல்ல அமைப்புக்கள் உண்டு, பறவைகளுக்கென்று சூழ்நிலை சுற்றுப்புறபாதுகாப்பு, வனவிலங்கு ஆர்வலர்கள் என்று பல உண்டு. பின்னர் தான் சில பத்திரிகைகள் மற்றும் இந்துமத அமைப்புக்கள் மூலம் இவர்களின் பின்புலம் வெளியே தெரியவந்தது.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
24-நவ-202121:43:54 IST Report Abuse
Rasheel கேரளா கல்வியிலும், ஊழல் ஒழிப்பிலும் ஓரளவு முன்னேறி இருந்தாலும், தீவிரவாதத்தில் முன்னோடியாக இருக்கிறது. 1. ஈராக் ஆப்கானிஸ்தான் நாடுகளில் நடைபெற்ற ஷியாவிற்கு மற்றும் சீக்கியர்களுக்கு எதிரான குண்டுவெடிப்பு குற்றங்களில் அமைதி வழி சேட்டன்களின் கைவரிசை கண்டுபிடிக்கபட்டு இருக்கிறது. 2. ஆப்கான் சென்ற மதமாற்றப்பட்ட பெண்களில், தீவிரவாதத்தில் பலர் கேரளாவை சேர்ந்தவர்களாவாகவும், அவர்கள் நாடு திரும்பவும் அவர்கள் பெற்றோர் முறையீடு செய்கிறார்கள். 3. மலப்புரம், லக்ஷதீவு போன்ற பகுதிகளில் மலையாள மொழி வல்லுநர்களுக்கு சிலை வைக்க ஜிஹாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். 4. லவ் ஜிகாத் பற்றி பல மலையாள பாதிரிகள் பேசியவண்ணம் செய்திகள் வருகிறது. 5. ரோஹிணிய மற்றும் பங்களாதேஷிகளுக்கு புகலிடமாகவும் கேரளா மாற்றி வருவதாக தெரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X