பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 49 ஏரிகள் குத்தகை

Added : நவ 24, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள 49 ஏரிகள், 3 வருட காலத்திற்கு குத்தகை விடப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில், தீவிர

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள 49 ஏரிகள், 3 வருட காலத்திற்கு குத்தகை விடப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில், தீவிர உள்நாட்டு மீன்வளர்ப்பு மற்றும் விற்பனை திட்டத்தின் கீழ் 49 ஏரிகள் குத்தகைக்கு விடப்படுகிறது.அதன்படி, 01.07.2021 முதல் 31.06.2024 வரை மூன்று ஆண்டு கால குத்தகைக்கான, ஒப்பந்த புள்ளி கோரும் டெண்டர் விண்ணப்பங்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகம், எண்.10, நித்தியானந்தம் நகர், வழுதரெட்டி,

விழுப்புரம் -605401 என்ற அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. நாளை (25ம் தேதி) மாலை 3 மணிக்குள், ரூ.300 செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அடுத்த மாதம் 1ம் தேதி மாலை 5.45 மணிக்குள் இதே அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் விண்ணப்பங்கள் பிரிக்கப்பட்டு, அதிக பட்ச தொகை கோரியவருக்கு குத்தகை உறுதி ஆணை வழங்கப்படும். மேலும் விபரங்களை 04146-259329 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X