தமிழ்நாடு

மரக்காணம் ஒன்றிய சேர்மன் பதவி ஏற்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
மரக்காணம் : மரக்காணம் ஒன்றிய சேர்மன் தேர்தலில் வெற்றி பெற்ற தயாளன் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றிய சேர்மன் தேர்தல் பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே நேற்று முன்தினம் நடந்தது. தி.மு.க., வை சேர்ந்த ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் அர்ஜூனன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளன் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் அதிகாரி சரவணன் மறைமுக தேர்தலை

மரக்காணம் : மரக்காணம் ஒன்றிய சேர்மன் தேர்தலில் வெற்றி பெற்ற தயாளன் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றிய சேர்மன் தேர்தல் பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே நேற்று முன்தினம் நடந்தது.

தி.மு.க., வை சேர்ந்த ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் அர்ஜூனன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளன் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் அதிகாரி சரவணன் மறைமுக தேர்தலை நடத்தினார். இதில், தயாளன் 14 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இதற்கு அர்ஜூனன் தரப்பு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து, நான் தான் 14 ஓட்டுகள் பெற்றேன். என்னைத்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.

இல்லையெனில் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கொடுத்த மனுவை அதிகாரிகள் நிராகரித்தனர்.இந்நிலையில் மரக்காணம் ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் தயாளன், துணை சேர்மன் பழனி ஆகியோர் நேற்று பதவி ஏற்று கொண்டனர். பி.டி.ஓ., ரவி மற்றும் சில அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனர்.இதற்கிடையே எதிர் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக கூறி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X