பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் இடத்தில் வெடி வைத்து தகர்த்தவர்கள் மீது நடவடிக்கை; பிரதமருக்கு இந்து மகாசபா மனு

Added : நவ 24, 2021
Share
Advertisement
விழுப்புரம் ; 'செஞ்சி கோவிலில் அனுமதியின்றி வெடி வைத்து தகர்த்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று இந்து மகாசபா கோரிக்கை விடுத்துள்ளது.அகில பாரத இந்து மகா சபா மாநில செயலாளர் நிரஞ்சன், இந்திய தொல்லியல் ஆய்வு துறை பொது இயக்குனர் உஷா சர்மா, தொல்பொருள் கண்காணிப்பு ஆய்வாளர் சுப்ரமணியம், பிரதமர் மற்றும் தமிழக காவல் துறை தலைமை இயக்குனருக்கு அனுப்பியுள்ள


விழுப்புரம் ; 'செஞ்சி கோவிலில் அனுமதியின்றி வெடி வைத்து தகர்த்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று இந்து மகாசபா கோரிக்கை விடுத்துள்ளது.அகில பாரத இந்து மகா சபா மாநில செயலாளர் நிரஞ்சன், இந்திய தொல்லியல் ஆய்வு துறை பொது இயக்குனர் உஷா சர்மா, தொல்பொருள் கண்காணிப்பு ஆய்வாளர் சுப்ரமணியம், பிரதமர் மற்றும் தமிழக காவல் துறை தலைமை இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனு விபரம்;

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கோட்டையில் 1,500 ஆண்டுகள் பழமையான சிங்கவரம் ரங்கநாதசாமி கோவில் உள்ளது. இது மலையில் உள்ள குடவரைக்கோவில். இந்த கோவிலுக்கு வாகனம் செல்ல பாதை அமைப்பதாக கூறி, குவாரி அமைத்து கற்களை வெடிவைத்து தகர்க்கும் முயற்சி நடக்கிறது.இக்கோவிலை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்திய தொல்லியல் துறையிடம் உள்ளது. செஞ்சி கோட்டையை தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்துள்ள நிலையில், ஸ்ரீ ரங்கநாதரின் மலையை வெடி வைத்து தகர்த்துள்ளது வருத்தப்படும் செயலாகும்.

கோவில் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளது. இக்கோவிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியின்றி வெடி வைத்து தகர்த்த ஒப்பந்ததாரர், அதிகாரிகள், கிரேன் ஆப்ரேட்டர் மற்றும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X