சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மீது லாரி மோதல் மருத்துவ மாணவர் பலி

Added : நவ 24, 2021
Share
Advertisement
கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே பைக்கில் சென்ற மருத்துவக் கல்லுாரி மாணவர் லாரி மோதி இறந்தார்.கேரள மாநிலம், திருவனந்தபுரம், பசுவத்நாடா அடுத்த பாலராபுரத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு மகன் அபுஜித், 24; புதுச்சேரி மதகடிப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு படித்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு கல்லுாரி விடுதியில் இருந்து, தனது யமகா

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே பைக்கில் சென்ற மருத்துவக் கல்லுாரி மாணவர் லாரி மோதி இறந்தார்.கேரள மாநிலம், திருவனந்தபுரம், பசுவத்நாடா அடுத்த பாலராபுரத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு மகன் அபுஜித், 24; புதுச்சேரி மதகடிப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு கல்லுாரி விடுதியில் இருந்து, தனது யமகா பைக்கில் (கே.எல்01 சி.எஸ் 1973) வில்லியனுார் சென்றார். அங்கிருந்து மீண்டும் மதகடிப்பட்டில் உள்ள கல்லுாரி விடுதிக்கு சென்று கொண்டிருந்தார்.இரவு 10.30 மணியளில் கண்டமங்கலம் அருகே உள்ள தனியார் பேக்கேஜிங் கம்பெனி அருகே , புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற லாரி (டி.என்.88 ஒய் 334) பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. துாக்கி வீசப்பட்ட அபுஜித் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

விபத்து குறித்து கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, விபத்துக்கு காரணமாக டேங்கர் லாரியை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X